விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி.. லியோ படத்தில் எந்தஒரு காட்சியும் நீக்கப்படாதாம்! நிம்மதியா இருங்க!

Photo of author

By Divya

விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி.. லியோ படத்தில் எந்தஒரு காட்சியும் நீக்கப்படாதாம்! நிம்மதியா இருங்க!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘லியோ’.இப்படத்தில் த்ரிஷா,சஞ்சய் தத் ,அர்ஜுன் சர்ஜா,கவுதம் வாசுதேவ் மேனன்,மன்சூர் அலிகான்,மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.வருகின்ற அக்டோபர் மாதம் 19 அன்று இப்படம் வெளியாக உள்ள நிலையில் இந்த மாத இறுதியில் இப்படத்தின் இசை வெளியீட்டு சென்னையில் பிரமாண்டமாக
நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

முன்னதாக கடந்த ஜூன் மாதம் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு லியோ படத்தில் அனிருத் இசையில் இடம்பெற்றிருந்த ‘நான் ரெடி தான்’ பாடல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.வெளியாகி சில மாதங்களிலேயே இந்த பாடல் யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது.

ஆனால் இந்த பாடலில் சில சர்ச்சை வார்த்தைகள் இடம் பெற்றிருப்பதாக பலர் இப்பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.இந்த பாடல் போதை பழக்கத்தை தூண்டும் வகையில் அமைந்திருப்பதாக சொல்லப்பட்டது.இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இந்த நான் ரெடி தான் பாடலில் இடம்பெற்ற ‘பத்தாது பாட்டில் நான் குடிக்க.. அண்டாலக் கொண்டா சியர்ஸ் அடிக்க’ மற்றும் ‘மில்லி உள்ள போனா கில்லி வெளியே வருவான்டா’ என்ற வரிகளை சென்சார் போர்டு நீக்கியது.இதுகுறித்த சான்றிதழ் இணையத்தில் வேகமாக பரவியது.

இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் இருந்தனர்.இந்நிலையில் எந்த வித மாற்றமும் இன்றி,காட்சிகள் கட் செய்யாமல் இங்கிலாந்தில் லியோ படம் அப்படியே ஒளிபரப்பாகும் என விநியோகஸ்தர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் விஜய் ரசிகர்கள் தற்பொழுது கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.