நிபா வைரஸ் பரவல் எதிரொலி!!! மீண்டும் மக்கள் முகக் கவசம் அணி வேண்டும் என்று அரசு அறிவிப்பு!!!

0
43
#image_title

நிபா வைரஸ் பரவல் எதிரொலி!!! மீண்டும் மக்கள் முகக் கவசம் அணி வேண்டும் என்று அரசு அறிவிப்பு!!!

கேரளா மாநிலத்தில் நிபா வைரல் மீண்டும் பரவத் தொடங்கியதை அடுத்து கேரளா மாநிலத்தின் அருகே உள்ள மாஹே மாவட்டத்தில் மக்களும் மாணவ மாணவிகளும் முகக் கவசம் அணிய வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.

கேரளா மாநிலத்தில் மீண்டும் நிபா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. நிபா வைரஸ் பரவலால் இது வரை இரண்டு பேர் கேரளா மாநிலத்தில் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். நிபா வைரஸ் தாக்குதலால் இரண்டு பேர் உயிரிழந்தது கேரளா மாநிலத்தில் பெரும் அச்சத்தை ஏன்படுத்தியுள்ளது.

மேலும் உயிரிழந்த இரண்டு பேரின் குடும்பத்தில் 4 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் தனிமைபடுத்தப்பட்டு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கோரளா மாநிலத்தில் நிபா வைரஸ் மேற்கொண்டு பரவாமல் தடுக்க மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது.

அதன்படி கேரளா மாநிலத்தில் கோழிக்கோடு மாவட்டத்தில் 7 ஊராட்சிகளில் 43 வார்டுகள் நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளாகவும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் பரவி வருவதால் கேரளா மாநிலத்தின் அருகே உள்ள புதுச்சேரியின் மாஹே மாவட்டத்தில் மக்கள் முகக் கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவறங்களில் மாணவர்கள் முதல் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் பரவி வருவதால் தமிழக கேரளா எல்லை பகுதிகளில் சோதனைச் சாவடியில் மருத்துவக் குழுவினார் முகாமிட்டு மக்களுக்கு காய்ச்சல், சளி போன்றவை இருக்கின்றதா என்று பரிசோதனை செய்து வருகின்றனர்.