குட் நியூஸ்! தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை!
தமிழகத்தில் காந்தி ஜெயந்தி, சரஸ்வதி பூஜை உள்ளிட்ட பண்டிகைகள் தொடங்குகிறது. இதை முன்னிட்டு அக்டோபர் 1 முதல் 5ம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக கூறியுள்ளனர். பண்டிகை காலம் முடிந்த பிறகு மேலும் அக்டோபர் 6ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு வழக்கம்போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையெடுத்து 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலாண்டு தேர்வுகள் தொடங்குகிறது. செப்டம்பர் 26-ல் தொடங்கி 30 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மேலும் 11ம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 23 முதல் 30 வரை காலாண்டு தேர்வுகள் நடைபெறுகிறது. பள்ளி மாணவர்களுக்கு செப்., 30 காலாண்டு தேர்வு முடியும் நிலையில், தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.காலாண்டு தேர்வுக்குப் பின் ஒரு வாரம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். பின்பு அக்டோபர் 6- ல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.