கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடத்தப்படவில்லை. இருதரப்பு கிரிக்கெட் தொடர்கள் வரிசையாக ரத்து செய்யப்பட்டு வந்த நிலையில் பல அணிகளுக்கும் கடும் வருவாய் இழப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள நாடுகள் மீண்டும் கிரிக்கெட் போட்டியை நடத்த முயற்சிகள் மேற்கொண்டன.
ஆஸ்திரேலிய அணி, இந்தியாவுடன் டெஸ்ட் தொடரில் ஆட இருந்தது. அதே நேரத்தில் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரில் ஆட இந்தியா முன்பே திட்டமிட்டு இருந்தது.
கொரோனா பாதிப்புகளுக்கிடையே நவம்பர் மாதம் ஆஸ்திரேலியா செல்ல இந்தியா சம்மதம் கூறியதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளிவந்த நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அமைப்பு வெளியிட்டுள்ள கிரிக்கெட் அட்டவணையில் இந்தியா இடம் பெற்றுள்ளது.
அந்த அட்டவணையின்படி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர்கள் அக்டோபரிலும், நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நவம்பர் தொடங்கி ஜனவரி வரையும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜனவரியிலும் நடைபெற உள்ளது.
இந்தியா ஆஸ்திரேலியாவுடன் மோத உள்ள டி20 தொடர் அட்டவணையில்
முதல் டி20 போட்டி அக்டோபர் 11 அன்று பிரிஸ்பேனிலும்
இரண்டாவது டி20 போட்டி அக்டோபர் 14 ளில் கேன்பர்ராவிலும்
மூன்றாவது டி20 போட்டி அக்டோபர் 17 அன்று அடிலெய்டிலும் நடக்க உள்ளது.இதற்கிடையில் ஆப்கானிஸ்தானிற்கும் இந்தியாவிற்கும் ஒரு டெஸ்ட் தொடரும் நடைபெற உள்ளது.
அதற்கிடையே ஆஸ்திரேலிய அணி முதன்முறையாக ஆப்கானிஸ்தான் அணியுடன் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் ஆட உள்ளது. அந்த டெஸ்ட் போட்டி நவம்பர் 21 முதல் 25 வரை பெர்த்தில் நடைபெற உள்ளது.
இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடர் அட்டவணை :
முதல் டெஸ்ட் – டிசம்பர் 3 முதல் 7 வரை – பிரிஸ்பேன்
இரண்டாவது டெஸ்ட் டிசம்பர் 11 முதல் 15 வரை – அடிலெய்டு
மூன்றாவது டெஸ்ட் – டிசம்பர் 26 முதல் 30 வரை – மெல்போர்ன்
நான்காவது டெஸ்ட் – ஜனவரி 3 முதல் 7 வரை – மெல்போர்ன்
இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோத உள்ள ஒரு நாள் போட்டித் தொடர் அட்டவணை :
முதல் ஒருநாள் போட்டி – ஜனவரி 12 – பெர்த்
இரண்டாவது ஒருநாள் போட்டி – ஜனவரி 15 – மெல்போர்ன்
மூன்றாவது ஒருநாள் போட்டி – ஜனவரி 17 – சிட்னி