உட்காரும் இடத்தில் கொப்பளம் வந்து விட்டதா? கவலையை விடுங்கள்.. இதை ட்ரை பண்ணுங்கள்!!

Photo of author

By Divya

உட்காரும் இடத்தில் கொப்பளம் வந்து விட்டதா? கவலையை விடுங்கள்.. இதை ட்ரை பண்ணுங்கள்!!

உடலில் பருக்கள் ஏற்பட்டால் அவை வலி,எரிச்சலை உண்டாக்கும்.முகத்தில் அதிகளவு எண்ணெய் சுரந்தால் பருக்கள் வரும்.அதேபோல் அக்குள்,முதுகு,பெண்களுக்கு பிறப்புறுப்பு உள்ளிட்ட பகுதிகளில் சீழ் பருக்கள் உண்டாகும்.

அதிலும் உட்காரும் இடத்தில் கொப்பளம் வந்து விட்டால் அவை குணமாவதற்குள் ஒரு வழியாகி விடுவோம்.பின் புறத்தில் பருக்கள் வந்தால் உட்காருவதில் சிரமம் ஏற்படும்.இந்த பின்புற கொப்பளம் பெரும்பாலும் உடல் சூடு காரணமாகத் தான் ஏற்படுகிறது.

இவை பின்புறத்தில் ஒரு இடத்தில் வந்தாலே மற்ற இடங்களில் வேகமாக பரவி விடும்.சிலர் பின்புறத்தில் உள்ள கொப்பளத்தை உடைக்க முயற்சிப்பார்கள்.அவ்வாறு செய்தால் வலி மற்றும் எரிச்சல் அதிகமாகும்.அது மட்டுமின்றி அவ்விடத்தில் பருக்களின் எண்ணிக்கை அதிகமாகும்.

சிலருக்கு கொப்பளம் உடைந்து சீழ் பிடித்து விடும்.எனவே இவ்வாறான கொப்பளம் வந்தால் சிரமின்றி அதை குணமாக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து முயற்சித்து வரவும்.

1)வெது வெதுப்பான நீர்

உங்கள் பின்புற கொப்பளம் மீது வெது வெதுப்பான நீர் கொண்டு ஒத்தடம் கொடுக்கவும்.இவ்வாறு செய்தால் அப்பகுதியில் உள்ள பாக்டீரியாக்கள் அழிந்து விடும்.இதனால் சில தினங்களில் அவை மறைந்து விடும்.

2)தேன் + மஞ்சள் தூள்

ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூளில் 1/2 தேக்கரண்டி தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.இந்த பேஸ்டை பின்புற கொப்பளத்தின் மீது பூசி வந்தால் அவை சில தினங்களில் மறைந்து விடும்.

3)பூண்டு

ஒரு பூண்டை இடித்து அதன் சாற்றை பின்புற கொப்பளத்தின் மீது பூசி வந்தால் அவை சில தினங்களில் மறைந்து விடும்.

4)கற்றாழை ஜெல்

ஒரு தேக்கரண்டி பிரஸ் கற்றாழை ஜெல்லை பின்புற பக்கத்தில் உள்ள கொப்பளம் மீது பூசி வந்தால் அவை சில தினங்களில் மறைந்து விடும்.