இவர்களுக்கெல்லாம் ரூ.6,000 நிவாரண நிதி இல்லை!

0
258
#image_title

தமிழகம் முழுவதுமே டிசம்பர் மாத வெள்ளத்தில் போராடி வருகிறது. கடந்த டிசம்பர் 4ஆம் தேதி இன்றி பெய்த பெரும் மழையால் சென்னை முழுவதும் வெள்ளக்காடாக இருந்தது.

 

அப்பொழுது ரூ 6000 உதவித்தொகை வழங்கப்படும் என்று திமுக அரசால் அறிவிக்கப்பட்டிருந்தது. இப்படி அறிவித்து மக்களுக்கு டோக்கன்களும் வழங்கப்பட்டது.

 

நியாயவிலைக் கடைகளில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று ரூ.6 ஆயிரம் பெற்று வருகிறார்கள். பல நியாயவிலைக் கடைகளில் மாலையிலும் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன.

 

ஒரு சிலருக்கு கிடைத்த டோக்கன்கள் ஒரு சிலருக்கு மட்டும் கிடைக்கவில்லை. அதற்கான காரணங்கள் இப்பொழுது தான் தெரியவந்துள்ளது.

 

அதாவது, தமிழகத்தில் 2.24 கோடி குடும்ப அட்டையில் வெறும் 3 லட்சம் பேர் மட்டுமே சர்க்கரை அட்டை வைத்திருக்கிறார்கள். பொங்கல் பரிசு, நிவாரணத்தொகை காரணமாக, வசதி படைத்தவர்களும் அரிசி அட்டையே வைத்திருக்கிறார்கள்.

 

நான்கு மாவட்டங்களில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 6 ஆயிரம் வழங்கப்பட இருந்தது. அதில் வசதி படைத்தவர்கள் என தனியாக பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது என சொல்லப்படுகிறது.

 

இந்த மொத்த பட்டியலில் அரசு ஊழியர்கள் மற்றும் வருமான வரி செலுத்துவோர் என அவர்களை தவிர்த்துதான் வருமான பட்டியல் தயார் செய்து உள்ளனர்.

 

தமிழக நிதித் துறை, , இன்டகிரேட்டடு பைனான்சியல் அண்டு ஹியூமன் ரிசோர்சஸ் மேனேஜ்மென்ட் எனும் சாப்ட்வேர் மூலம், குடும்ப அட்டை வைத்திருப்போரில் , அரசு ஊழியர்கள், பொதுத் துறை நிறுவன ஊழியர்கள் என பட்டியலோடு ஒப்பிட்டு பிரித்துள்ளது.

 

கார் வாங்கும் பொழுது காரின்  அதாவது வாகன பதவிற்காக வழங்கப்பட்ட ஆவணங்களை கொண்டு ஆதார் எண்ணை கொண்டு யார் பெயரில் கார் உள்ளதோ அந்த கார் வைத்திருப்பவர்களின் குடும்ப அட்டை மட்டும் தனியாக பிரித்தெடுத்துள்ளனர்.

 

மேலும் வருமான வரி செலுத்துவோரின் குடும்ப அட்டையை தனியாக பிரித்து எடுத்துள்ளனர்.

 

எந்த குடும்ப தலைவரின் பெயரின் மீது கார் உள்ளதோ, யார் வருமான வரி செலுத்துகின்றாரோ, அரசு, மத்திய அரசு நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்கு  நிவாரண நிதி வழங்கப்படவில்லை.

இதனால் பாதிப்பு அனைவருக்கும் ஒன்றுதான் என்று வந்த பிரச்சனையின் பெயரில், மேலும் அவர்களுக்கும் ஒரு வாய்ப்பு வழங்கும் நிலையில் டோக்கன்கள் வழங்கப்பட்டு அதில் வங்கி எண் உள்ளிட்ட விவரங்களை எழுத சொல்லி,  மறுபரிசீலனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Kowsalya