எட்டாம் வகுப்பு தேர்ச்சி மட்டும் போதும்!! அரசு வேலையில் மாதம் 15,000 முதல் 50,000 வரை சம்பளம்!!

Photo of author

By Jayachithra

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஒரு இன்ப செய்தி காத்திருக்கின்றது. தமிழகத்தில் அரசு மீன்வளத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இதனை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள் 31.7.2021 ஆகும். அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பம் செய்ய, எட்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் சைக்கிள் ஓட்ட தெரிந்திருந்தால் மட்டுமே போதும். இந்த காலகட்டத்தில் கொரோனாவானது மிகவும் தலைவிரித்து ஆடுகிறது. இந்த சூழலில் வேலை இல்லாமல் அனைவரும் திண்டாடி வருகின்றனர்.

மேலும், வேலை கேட்டு பல இடங்களில் அனைவரும் சுற்றி திரிகின்றனர். சில வேளைகளில் தடையில்லை. ஆனால் சுயலாபம் பெறுவதற்கு வேலை தேடி அலையும் நடுத்தர வர்க்கத்தினருக்கு மட்டுமே இங்கு வேலை வாய்ப்பு எதுவும் கிடைப்பதில்லை.

அவர்களுக்காகவே தமிழ்நாடு அரசு பல வேலைகளை தொடர்ந்து அறிவித்து வருகிறது. அதை போலவே, தற்போது தமிழ்நாடு அரசு மீன்வளத் துறையில் காலியாக உள்ள இடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

எட்டாவது தேர்ச்சி பெற்றிருந்தால், அதுவே போதும் அதுதான் தேவையான தகுதி மேலும், சைக்கிள் ஓட்டத் தெரிந்திருந்தாலே அலுவலக உதவியாளர் பணிக்கு நீங்கள் தகுதியானவர்கள் ஆவீர். சம்பளம் 50,000 வரை இவ்வேளையில் கிடைக்கும். மேலும், இது குறித்த கூடுதல் விவரங்களுக்காக https://fisherie.stn.gov.in என்ற இணையத்தில் பார்க்க வேண்டும்.