குழந்தைகளுக்கு பெரும் உதவித்தொகை!! மத்திய அரசின் புதிய அறிவிப்பு!!

0
273

நாடு முழுவதும் கொரோனாவின் கோரத்தாண்டவத்தில் பலரும் உயிரிழந்து வருகின்றனர். அவர்களின் இழப்பு ஈடு செய்ய இயலாது, என்றாலும் பல சலுகைகளை குடும்பத்தினருக்கு அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பலியான ஊழியர்கள் ESICஇல் பதிவு செய்து இருந்தால், குடும்பங்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஓய்வு ஊதியம் கிடைக்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இறந்த ஊழியர்களின் குடும்பத்தினர் தினசரி 90% சமமான தொகையை இரண்டு வருட காலத்திற்கு பெறுவார்கள். இந்த திட்டமானது மார்ச் 24.2020 முதல் மார்ச் 24.2022 வரையில் அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பென்ஷன் தொகையை ESIC மற்றும் EPFO மூலம் இணைக்கப்பட்ட இன்சூரன்ஸ் திட்டத்தின் மூலம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இந்திய அரசு எப்பொழுதும் உறுதுணையாக இருக்கிறது என்று நரேந்திர மோடி ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து வருகிறார்.

முன்னதாக காப்பீட்டு தொகை 6 லட்சமாக இருந்தது. இதனை தொழிலாளர் அமைச்சர் சந்தோஷ் கங்வார் தலைமையிலான EPFO -வின் மத்திய அறங்காவலர் குழு, செப்டம்பர் மாதம் 7 லட்சமாக உயர்த்தியது. இதன் காரணமாக ஊழியர் இறந்து விட்டாலும் 7 லட்சம் ரூபாயை பெற முடியும். EPFO கணக்கு வைத்திருக்கும் ஊழியர்களின் நாமினிகள் இந்த தொகையினை கோரலாம். நாமினிகள் இல்லை என்றால் அவரது சட்டபூர்வமான வாரிசுக்கு தொகை வழங்கப்படும்.

இந்த திட்டத்தின் கீழ் ஊழியர் யாரையும் நாமினியாக பரிந்துரைக்கவில்லை எனில் சட்டப்பிரிவுகளில் தொகையை வந்து பெற்றுக் கொள்வார்கள். இந்த தொகையை நாமினிக்கு பெற form.5f கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு உதவி செய்ய பிரதமர் மோடி தலா 10லட்சம் ரூபாய் பெற்றோரை குழந்தைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்.மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 5 லட்சம் ரூபாய் உதவித்தொகை அறிவித்துள்ளார்.

Previous articleஅதிகாரிகளுக்கு புதிய உத்தரவை பிறப்பித்த முதலமைச்சர் ஸ்டாலின்! பரபரப்பான தலைமைச் செயலகம்!
Next article52 பேர் உடல் கருகி உயிரிழப்பு! கொரோனா  நோயாளிகளுக்கு ஏற்பட்ட அவலம்!