அதிகாரிகளுக்கு புதிய உத்தரவை பிறப்பித்த முதலமைச்சர் ஸ்டாலின்! பரபரப்பான தலைமைச் செயலகம்!

0
74

நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மூலமாக முன்னெடுக்கப்படும் பல திட்டப் பணிகளில் முன்னேற்றம் தொடர்பாக அடுத்த பத்து வருடங்களில் செயல்படுத்த பல உத்தேச திட்டங்கள் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நேற்றைய தினம் தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் ஒன்று நடைபெற்று இருக்கிறது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் பொதுப்பணி நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் ஏவ வேலு தலைமைச் செயலாளர் மற்றும் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர் அதோடு அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில் தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து பகுதிகளிலும் சாலை போக்குவரத்து பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்திற்கும் சரக்குகளை மாநிலத்தின் அனைத்துப் பகுதிக்கும் எடுத்துச்செல்லும் விதத்திலும் சாலை கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

நெடுஞ்சாலை துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், புதிய சாலை அமைத்தல், சாலைகளை விரிவுபடுத்துதல் மற்றும் உறுதிப்படுத்துதல் புதுப்பித்தல், பராமரித்தல் புறவழிச்சாலை, சுற்றுச் சாலை அமைத்தல், புதிய பாலங்கள் கட்டுதல் பழைய பழங்களை சீரமைப்பு செய்தல், உயர்மட்ட மேம்பாலம் அமைத்தல், ரயில்வே கடவுக்கு பதிலாக சாலை மேம்பாலம் மற்றும் கீழ் பாலம் கட்டுதல், சாலை சந்திப்புகள் குறுகிய வளைவுகளை மேம்படுத்துதல், சாலை பாதுகாப்பு பணிகள் சாலையின் இருபுறங்களிலும் மரக் கன்றுகளை நடுதல், போன்ற பல திட்டங்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.