தமிழக அரசின் உத்தரவு! நவம்பர் 1 முதல் இதுவும் செயல்படும்!
கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருடங்களாக மக்களை அதிகளவு பாதித்து வருகிறது.தற்பொழுது தான் மக்கள் கொரோனா தொற்றின் இரண்டாவது பிடியிலிருந்து மீண்டு வந்துள்ளனர்.இருப்பினும் மூன்றாவது அலை நோக்கி மக்கள் சென்று கொண்டிருக்கின்றனர்.அந்தவகையில் தற்பொழுது தான் அரசாங்கம் அனைத்து துறைகளிலும் தளர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.அந்தவகையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கொரோனா தொற்று காரணமாக விடுப்பு அளிக்கப்பட்டது.மேலும் அவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்கள் எடுக்கப்பட்டது.
மீண்டும் தொற்று பாதிப்பு குறைந்தவுடன் பள்ளிகள் திறக்கப்பட்டது.அவ்வாறு திறந்த பிறகு பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொரோனா தொற்றுக்கு பாதிப்பிற்குள்ளாகினர்.அப்பொழுது கொரோனா தடுப்பூசியும் நடைமுறைக்கு வரவில்லை.அதனால் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டது.அதனையடுத்து தடுப்பூசி நடைமுறைக்கு வந்தது.அரசு ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு அரசாங்கம் உத்தரவு பிறபித்தது.
அதனையடுத்து அனைத்து துறைகளிலும் தளர்வுகளுடன் கூடிய வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்தினர்.தற்பொழுது பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது.முதலில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது.அதனையடுத்து 2 ஆம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டது.அடுத்தடுத்தாக திரையரங்குகள்,சுற்றுலாத்தலங்கள் திறக்கப்பட்டது.அதனையடுத்து தொடக்ககல்வி மாணவர்களுக்கு எப்பொழுது பள்ளிகள் திறக்கப்படும் என கேள்விகள் எழுந்த வண்ணமாக இருந்தது.
அப்பொழுது பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முதல்வருடன் ஆலோசித்த பிறகே முடிவுகள் வெளிவரும் என கூயிருந்தார்.அதேபோல முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வரும் நவம்பர் மாதம் முதல் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என கூறியிருந்தார்.அரசாங்கம் கூறிய தேதியிலிருந்து மூன்று தினங்களுக்குள்ளேயே தீபாவளி பண்டிகை வர உள்ளது.அதனால் பண்டிகை முடிந்து தான் பள்ளிகள் திறக்கப்டும் என பல குழப்பங்கள் எழுந்து வந்தது.அதற்கு விளக்கமளித்த கல்வித்துறை அமைச்சர் அரசாங்கம் கூறிய தேதியில் பள்ளிகள் திறக்கபப்டும் என தெரிவித்தார்.
அதேபோல 1 வகுப்பு மாணவர்களுடன் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட அவர்களது பெற்றோர்கள் இருக்கலாம் என்று தெரிவித்தார்.மேலும் குழந்தைகளால் அதிக நேரம் வகுப்புகளில் அமர முடியவில்லை என்றால் வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என்றும் தெரிவித்தார்.அதனையடுத்து முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஊரடங்கு குறித்து தற்பொழுது ஆலோசனை கூட்டம் ஒன்று நடத்தினார்.அப்பொழுது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் கோவில்களில் தினசரி தரிசனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளார்.மேலும் விளையாட்டு பள்ளிகள் மற்றும் மழலையர் பள்ளிகள் திறக்க அனுமதி அளித்துள்ளார்.குறிப்பாக இங்கு பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.வரும் நவம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் தொடக்க பள்ளி மாணவர்களிலிருந்து அங்கன்வாடி பள்ளிகள் வரை திறக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.