Cinema

போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் கைதான பிரபல தமிழ் நடிகையுடன் அரசு அதிகாரி லிவிங் டுகெதர் வாழ்க்கை! விசாரணையில் வெளியான இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள்!

தமிழ் சினிமாவில் நிமிர்ந்து நில்  போன்ற சில படங்களில் நடித்த பிரபல நடிகை ராகிணி திவேதி, கன்னட திரை உலகில் கொடி கட்டிப் பறக்கும் நடிகைகளில் ஒருவர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூரில் போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் கைதான 3 பேரிடம் நடத்திய தீவிர விசாரணைக்கு பிறகு  போதைப்பொருள் தடுப்பு விவகாரத்தில் நடிகை ராகிணி திவேதி-க்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் நடிகை ராகிணி திவேதி கைது செய்யப்பட்டார். அவரிடம் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

நடிகை ராகிணி திவேதி தனது காருக்கு ஃபேன்சி நம்பர் வாங்குவதற்காக உதவிய வட்டார போக்குவரத்து அதிகாரி உடன் ஏற்பட்ட நட்பினால் லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்ததாக அந்த விசாரணையில் தெரிவித்துள்ளாராம்.

மேலும் இவர் இந்த போதை கடத்தல் விவகாரத்தில் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருப்பதால் இவரிடம் இன்னும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளனர்.

இவர் இரண்டாவது குற்றவாளியாக இந்த வழக்கில் சேர்க்கப்பட்டிருப்பதால் இவருக்கு ஜாமீன் கிடைப்பது கொஞ்சம் கடினமான விஷயமாக தெரிகிறது. இவரிடம்  இன்னும் நடக்கவிருக்கும் விசாரணைக்குப் பிறகு பல சினிமா  பிரபலங்களும்  இந்த போதைக் கடத்தல் விவகாரத்தில் சிக்குவார் என்று கிசுகிசுக்கப்படுகிறது.

 

Leave a Comment