நெல்லை மாவட்டத்தில் மறைக்கப்பட்ட கொரோனா மரணங்கள்: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!!

0
184

நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை அரசு தரப்பில் மறைப்பதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு நெல்லை மாவட்டத்தில் மட்டும் 182 பேர் உயிரிழந்ததாக அரசு தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்படி 285 பேர் இறந்துள்ளார்கள். 103 உயிரிழப்புகள் மறைக்கப்பட்டுள்ளது. உயிர் இழப்புகளை குறைவாக கூறி அரசு மகுடம் சூட்டிக் கொள்ள நினைக்கிறது.

சென்னையில் மறைக்கப்பட்ட மரணங்களுக்கே இன்னும் விளக்கம் வராத நிலையில் அடுத்து அதிர்ச்சி நெல்லை மாவட்டத்தில். மக்களின் உயிரோடு விளையாடுவதை நிறுத்திவிட்டு உண்மை நிலவரத்தை வெளியிட வேண்டும் என்று முதல்வருக்கு வலியுறுத்தியுள்ளார் மு.க.ஸ்டாலின்.

Previous articleகார்த்தியின் 22-வது படத்தின் சீக்ரெட்டை ரிலீஸ் செய்த அதிகாரபூர்வ அறிவிப்பு!
Next articleபோதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் கைதான பிரபல தமிழ் நடிகையுடன் அரசு அதிகாரி லிவிங் டுகெதர் வாழ்க்கை! விசாரணையில் வெளியான இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here