அரசு ஊழியர்கள் இனிமேல் இந்த போனை பயன்படுத்தக் கூடாது!! அரசின் அதிரடி உத்தரவு!!
வெளிநாட்டு தயாரிப்பான ஐபோனை இனிமேல் பயன்படுத்தக் கூடாது என அரசு ஊழியர்களுக்கு சீன அரசு அதிரடி தடை விதித்துள்ளது.
தற்போது உலகெங்கிலும் அனைத்து மக்களிடம் உள்ள ஒன்று உண்டென்றால் அது போன் தான். அதுவும் செல்போன் வந்து பிறகு உலகமே மக்களின் உள்ளங்கையில் வந்து விட்டது போல் மாறிவிட்டது. செல்போனால் ஏராளமான நன்மைகள் விளைந்தாலும் தீமைகளும் ஏராளம்.
இதில் விளையும் தீமைகளை கருத்தில் கொண்டு சீன அரசாங்கம் ஒரு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அது என்னவென்றால் சீன அரசு ஊழியர்கள் ஐபோனை இனிமேல் பயன்படுத்தக் கூடாது என்பதுதான்.
உலகின் முன்னணி செல்போன்களில் ஒன்றான ஐபோன் அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பாகும். ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளான ஐபோன் மற்றும் ஐபேட்களுக்கு ஏராளமான மவுசு உள்ளது. ஏராளமான உலக மக்கள் இதை பயன்படுத்தி வரும் நிலையில் தற்போது இதனுடைய புதிய தயாரிப்பு மார்க்கெட்டில் வெளிவர உள்ளது.
நமது அண்டை நாடான சீனாவிலும் இந்த ஐபோனை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இதை அடுத்து சீன அரசாங்கம் வெளிநாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் மீதான மோகத்தை குறைத்து இணைய பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் சீன அரசாங்கம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி பணியின் போது அரசு ஊழியர்கள் ஐபோன் மற்றும் வெளிநாட்டு முத்திரைகள் உள்ள தகவல் தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்துவது கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது.
இருப்பினும் சீனாவின் இந்த உத்தரவு குறித்து அதிகாரிகள் கூறுகையில் சீனாவின் செயலியான டிக் டாக் செயலியை அமெரிக்காவிலும் தடை விதித்ததே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. எனினும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அதிகாரியான ஜேக் சல்லிவன் என்பவர் சீன அதிகாரிகளுடன் இது குறித்து கலந்தாலோசிக்க விரும்பவில்லை என்று ன்று தெரிவித்துள்ளார்.