உடலில் ஊட்டச்சத்து குறைபாடாக இருக்கின்றதா!!! அதற்கு இதுதான் அறிகுறி!!! இதுதான் தீர்வு!!!

0
34
#image_title

உடலில் ஊட்டச்சத்து குறைபாடாக இருக்கின்றதா!!! அதற்கு இதுதான் அறிகுறி!!! இதுதான் தீர்வு!!!

நமது உடலில் ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருப்பதால் ஏற்படும் 5 அறிகுறிகள் பற்றியும் அதை குணமாக்கும் வழிமுறைகள் பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

நமது உடலுக்கு ஊட்டச்சத்துக்கள் என்பது முக்கியமான ஒன்றாக உள்ளது. ஊட்டச்சத்துக்கள் குறைந்தால் நமது உடலில் நோய்த் தொற்றுக்கள் எளிதில் தாக்கி நோய்களை ஏற்படுத்தும். ஊட்டச்சத்துக்கள் என்பது உடலுக்கு தேவையான அத்தியாவசிய மூலப்பொருட்களை உயிரணுக்களுக்கும் அதன் மூலமாக உயிரினங்களுக்கும் கொடுக்கும் ஒரு உணவு ஆகும்.

இந்த ஊட்டச்சத்துக்கள் விட்டமின்கள், தாது உப்புக்கள், புரதங்கள், கொழுப்புகள் என்று பல வகைப்படும். இந்த ஊட்டச்சத்துக்கள் உடலில் குறையும் பொழுது பலவாதமான பிரச்சனைகள் ஏற்படுகின்றது. அது மட்டுமால்லாமல் ஒவ்வொரு வகை ஊட்டச்சத்துக்கள் குறையும் பொழுதும் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளுக்கு நோய்த் தொற்றுகளும் பாதிப்புகளும் ஏற்படுகின்றது. இந்த பதிவில் உடலில் ஊட்டச்சத்த்துக்கள் குறைவதால் ஏற்படும் அறிகுறிகள் என்னென்ன என்பது பற்றியும் அதற்கான தீர்வுகள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

ஊட்டச்சத்துக்கள் குறைபாட்டுக்கான அறிகுறிகளும் தீர்வுகளும்…

* நமது உடலில் ஊட்டச்சத்துக்கள் குறைபாடு இருந்தால் கண்களின் மேல் உள்ள புருவ முடி உதிரும். தைராய்டு பிரச்சனை ஏற்படும். இதனை சரி செய்ய அயோடின் சத்துக்கள் நிறைந்த உணவை எடுத்துக் கொள்ளலாம்.

* நமது கண்களின் உட்பகுதிக்கு அடியில் வெள்ளையாக இருக்கும். இது நமது உடலில் இரும்புச்சத்து குறைந்திருப்பதை காட்டுகின்றது. இதை சரி செய்வதற்கு கீரை வகைகளையும், கேழ்வரகையும் சாப்பிடலாம்.

* நமக்கு அளவுக்கு அதிகமாக தலை முடி உதிரும். இது நமது உடலில் புரதச்சத்து குறைபாட்டை காட்டுகின்றது. இதை சரி செய்வதற்கு புரதச்சத்து அதிகம் உள்ள முட்டை அல்லது பன்னீரை தொடர்ந்து சாப்பிடலாம்.

* பற்களின் ஈறுகளில் இருந்து இரத்தம் கசியும். இது நமது உடலில் வைட்டமின் சி குறைவாக இருப்பதை காட்டுகின்றது. இதை சரி செய்வதற்கு வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் உள்ள ஆரஞ்சு பழம், கொய்யாப்பழம் ஆகியவற்றை சாப்பிடலாம்.

* நமக்கு சருமம் வறண்டு காணப்படும். இது நமது உடலில் ஃபாட்டி ஆசிட் சத்துக்கள் குறைவாக இருப்பதை காட்டுகின்றது. இதை சரி செய்வதற்கு தேங்காய் சாப்பிடலாம். கடல் சார்ந்த உணவு வகைகளை சாப்பிடலாம்.