10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலை! வருகின்ற 19 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்!
தமிழக அரசுக்கு கீழ் இயங்கி வரும் திருவள்ளுர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள “அலுவலக உதவியாளர்” பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் தபால் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலை வகை: தமிழக அரசு வேலை
நிறுவனம்: மாவட்ட நலவாழ்வு சங்கம் (திருவள்ளுர்)
பணி: அலுவலக உதவியாளர்
காலிப்பணியிடங்கள்: மொத்தம் 01
கல்வித் தகுதி: உதவியாளர் பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இப்பணிக்கு 45 வயதுக்குள் இருக்கும் நபர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.
ஊதிய விவரம்: இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.15,000/- ஊதியமாக வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.
விண்ணப்பிக்கும் முறை:
அலுவலக உதவியாளர் பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு முறையான ஆவணங்களுடன் தபால் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: 19-02-2024