அரசு-தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதல்!! 10க்கும் மேற்பட்டோர் காயம்!! 

Photo of author

By Amutha

அரசு-தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதல்!! 10க்கும் மேற்பட்டோர் காயம்!! 

Amutha

Govt-Private Buses Face-to-Face Clash!! More than 10 people injured!!

அரசு-தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதல்!! 10க்கும் மேற்பட்டோர் காயம்!! 

சென்னை பூந்தமல்லியில் அரசு பஸ்ஸும் தனியார் பஸ்ஸும் நேருக்கு நேர் மோதியதில் 10 பேர் காயம் அடைந்தனர்.

சென்னை பூந்தமல்லியில் இருந்து தியாகராய நகர் வரை செல்லும் மாநகர பஸ் (தடம் எண் 154) பூந்தமல்லியில் இருந்து பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பாரிவாக்கம் சாலை சந்திப்பு அருகே திரும்ப முயன்றது. அப்போது அந்த வழியாக தனியார் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிக்கொண்டு தனியார் பஸ் ஒன்று வேகமாக  வந்தது. அப்போது திடீரென எதிர்பாராத விதமாக தனியார் பஸ் அரசு பஸ் மீது வேகமாக மோதியது.

இந்த விபத்தில் இரண்டு பஸ்களின் முன்பக்க கண்ணாடியும் நொறுங்கியது. மேலும் இரண்டு பஸ்களிலும் பயணம் செய்த பத்துக்கு மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தின் போது சாலையோரம் நின்று இருந்த இருசக்கர வாகன ஓட்டிகளும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். எனினும் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை. அதிர்ஷ்டவசமாக எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பினர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் சிக்னலில் சிவப்பு விளக்கு போடப்பட்டதை கவனிக்காமல் தனியார் பஸ் டிரைவர் வேகமாக வந்தது விபத்துக்கான காரணம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.