அரசு பள்ளி ஆசிரியர் பணி..! பிப்ரவரி 23 ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்..!

Photo of author

By Divya

அரசு பள்ளி ஆசிரியர் பணி..! பிப்ரவரி 23 ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்..!

புதுச்சேரி பள்ளி கல்வி இயக்குனரகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் இருக்கும் நபர்கள் வருகின்ற பிப்ரவரி 23 ஆம் தேதி வரை ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

வேலை வகை: தமிழக அரசு வேலை

நிறுவனம்: புதுச்சேரி பள்ளி கல்வி இயக்குனரம்

பணியிடம்: புதுச்சேரி

பணி:

*ஆசிரியர்

பணியிடங்கள்: 407

கல்வி தகுதி: இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் UG/PG/B.ED படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகப்பட்ச வயது 30 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.

சம்பளம்: இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.20,000/- முதல் ரூ.40,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

*நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

இப்பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் பணி குறித்து கூடுதல் விவரங்களை அறிய py.gov.in என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 23-02-2024 விண்ணப்பம் செய்ய இறுதி நாள் ஆகும்.