டிகிரி முடித்தவர்களே இந்த வாய்ப்பை விட்டு விடாதீர்கள்!! வங்கியில் அசத்தல் வேலை!!

Photo of author

By CineDesk

டிகிரி முடித்தவர்களே இந்த வாய்ப்பை விட்டு விடாதீர்கள்!! வங்கியில் அசத்தல் வேலை!!

CineDesk

Updated on:

டிகிரி முடித்தவர்களே இந்த வாய்ப்பை விட்டு விடாதீர்கள்!! வங்கியில் அசத்தல் வேலை!!

பட்ட படிப்பு முடித்தவர்களுக்கு ஒரு புதிய வேலை வாய்ப்பு அறிவிப்பினை பேங்க் ஆப் பரோடா வங்கி வெளியிட்டுள்ளது.

பேங்க் ஆப் பரோடா வங்கியில் Manager / Assistant Manager, Corporate cards underwriting, Manager / Assistant Manager –product (co-brands and portfolio Management, Manager / Assistant Manager  Manager   product   and portfolio (consumer cards)  ஆகிய காலிபணியிடங்களை நிரப்புவதற்காக ஒரு புதிய வேலை வாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

இதற்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகளையும் வங்கி வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 50 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என்றும், அவர் அரசால் அங்கீகாரம் பெற்ற ஏதேனும் ஒரு கல்லூரியில் பட்ட படிப்பை முடித்திருக்க வேண்டும் என்றும், மேலும் பணியில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகளாவது முன் அனுபவம் இருக்க வேண்டும் என்றும் பல்வேறு விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் நபர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களின் பணியைப் பொறுத்து ஊதியம் வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தில் தனது முகவரிகளை பூர்த்தி செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

இதை விண்ணப்பிக்க ஜூன் 25 அன்று மாலை கடைசி தேதி என்றும் அறிவித்துள்ளார்கள். பட்ட படிப்பு முடித்தவர்களுக்கு இந்த வேலை வாய்ப்பு பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.