மார்க் ஆண்டனி பட இயக்குநரை கரம் பிடிக்க போகும் நடிகர் திலகத்தின் பேத்தி!!

0
158
#image_title

மார்க் ஆண்டனி பட இயக்குநரை கரம் பிடிக்க போகும் நடிகர் திலகத்தின் பேத்தி!!

தமிழ் திரையுலகில் வெற்றி படங்களை கொடுத்து வரும் இளம் இயக்குநர்களில் ஒருவர் ஆதிக் ரவிச்சந்திரன். இவர் ஜி.வி. பிரகாஷ் அவர்களை வைத்து “த்ரிஷா இல்லனா நயன்தாரா” என்ற படத்தை இயக்கி தமிழ் திரைக்கு அறிமுகமானார். இந்த படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து நடிகர் சிம்புவை வைத்து “அன்பானவன் அசராதவன் அடங்காதவன்” என்ற படத்தை இயக்கினார். இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பையும் வசூலையும் பெறாமல் தோல்வி படமாக அவருக்கு மாறியது.

அதன் பின் வெற்றி படத்தை கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்த ஆதிக் ரவிச்சந்திரன் அவர்கள் நடிகர் விஷால் மற்றும் S.J.சூர்யாவை வைத்து “மார்க் ஆண்டனி” என்ற படத்தை இயக்கினார். இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து ரூ.100 கோடி வரை வசூலை ஈட்டி பிளாக் பஸ்டர் படமாக கொண்டாடப்பட்டது.

அடுத்து அஜித் அவர்களை வைத்து படம் இயக்க உள்ளார் என்ற தகவல் வெளிவந்த வண்ணம் இருந்த நிலையில் தற்பொழுது அவர் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அது என்னவென்றால் 80, 90 காலகட்டத்தில் தமிழ் திரையுலகில் ஹீரோவாக கொண்டாடப்பட்ட நடிகர் பிரபு அவர்களின் மகளை ஆதிக் ரவிச்சந்திரன் வருகின்ற 15 ஆம் தேதி அன்று கரம் பிடிக்க இருக்கிறார் என்பது தான்.

ஏற்கனவே இவர்களின் நிச்சயதார்த்தம் இருவீட்டாரின் முன்னிலையில் நடந்து முடிந்த நிலையில் தற்பொழுது திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் இவர்களுக்கு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Previous articleபயணிகளுக்கு ஒரு ஜாக்பாட் நியூஸ்!! இனிமேல்  43 ரயில்கள் இந்த ரயில் நிலையத்திலும் நிற்கும்!!
Next articleகேரளா ஸ்டைல் காய் குழம்பு – சுவையாக செய்வது எப்படி?