இரண்டு பேத்திகளையும் கிணற்றில் வீசிய பாட்டி ! வெளிப்பட்ட அதிர்ச்சி சம்பவம்!

Photo of author

By Kowsalya

இரண்டு பேத்திகளையும் கிணற்றில் வீசிய பாட்டி ! வெளிப்பட்ட அதிர்ச்சித் தகவல்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது சொந்தப் பாட்டியால் கிணற்றில் வீசப்பட்ட இளம் பிஞ்சுகள்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் நிறைமதி குடிகாடு என்ற கிராமத்தை சேர்ந்தவர் தான் திருஞானசம்பந்தம் இவர் ஒரு சலவைத் தொழிலாளி இவரது மனைவி கீர்த்தனா இவர்களுக்கு அமுதினி ,ரிஷிகா என 2 மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு மாமியார் ஊரான தியாகதுருகத்திற்கு தனது 2 பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு கீர்த்தனா மற்றும் திருஞானசம்பந்தர் அவருடைய இரு மகள்களும் புறப்பட்டுள்ளனர்.

மூன்று நாட்கள் இருந்த நிலையில் நேற்று அனைவரும் சாப்பிட்டவுடன் படுத்து உறங்கி உள்ளனர்.

அதிகாலையில் கீர்த்தனா எழுந்து பார்க்கையில் இரண்டு மகள்களையும் காணவில்லை. திடுக்கிட்ட கீர்த்தனா தனது கணவரான திருஞான சம்பந்தரிடம் தெரிவித்துள்ளார்.

அவர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. .

அவர்கள் எங்கு தேடியும் பிள்ளைகளை காணாததால் மிகவும் பதட்டம் அடைந்துள்ளனர். பின்பு திருஞானசம்பந்தரின் மனநிலை பாதிக்கப்பட்ட அம்மாவான வள்ளியம்மாளை கேட்டுள்ளனர்.

முதலில் சொல்ல மறுத்த வள்ளியம்மாள் மீண்டும் வற்புறுத்திக் கேட்டதால் அவர்கள் சென்ற திசையை காட்டியுள்ளார்.

அங்கே கிணறு தானே உள்ளது என்று திருஞானசம்பந்தமும் கீர்த்தனாவும் பதற்றம் அடைந்துள்ளனர்.

இன்று காலை 7 மணி அளவில் உதயமாம்பட்டு செல்லும் பாதையில் பலராமன் என்பவரது கிணறு உள்ளது அந்த கிணற்றில் விழுந்து இருக்கலாம் என்று சந்தேகப்பட்டு ஊர் மக்கள் அனைவரும் தேடியுள்ளனர்.

கிணற்றில் ஆழம் அதிகமாக இருப்பதால் தியாகதுருகம் தீயணைப்பு காவலர்களுக்கு விவரத்தை சொல்லி அழைத்துள்ளனர்.

அதனடிப்படையில் தியாகதுருகம் தீயணைப்பு காவலர் சீனிவாசன் மற்றும் 7 காவலர்கள் கிணற்றில் இறங்கி குழந்தைகளை தேடும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.7 காவலர்கள் 50 அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கி தேடுதல் பணியை தீவிரப்படுத்தி தேடிய பொழுது ஒரு மணி நேரத்திற்கு பிறகே குழந்தைகளிலன் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

அதன்பின் தியாகதுருகம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது அங்கு வந்த இன்ஸ்பெக்டர் குமார், திருஞானசம்பந்தம், கீர்த்தனா மற்றும் வள்ளியம்மாள் ஆகியோரை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

குழந்தைகளது உடல்களை கைப்பற்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

திருஞானசம்பந்தம் கீர்த்தனா மற்றும் வள்ளியம்மாவை அழைத்து சென்ற போலீசார் விசாரணையில் மனநலம் பாதிக்கப்பட்ட வள்ளியம்மாள் தனது சொந்த இரண்டு பேத்திகளையும் கிணற்றில் வீசி கொன்றார் என்பது அம்பலமாகியுள்ளது.

மனநலம் பாதிக்கப்பட்டவரால் இரண்டு பிஞ்சுகள் உயிரிழந்த சம்பவம் கள்ளக்குறிச்சி பகுதி மக்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.