வரலாற்று சாதனை படைத்த நிறுவனம் திடீர் வீழ்ச்சி!!

0
75

பங்குச் சந்தை புதன்கிழமை சரிவில் முடிந்தது இதனால் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான செக்சென்ஸ் 422 புள்ளிகளை இழந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி 97.70 புள்ளிகள் குறைந்தது 

ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியாவின் மகாராஷ்டிராவில் மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்திய பன்னாட்டு நிறுவனம் ஆகும்.

இந்நிறுவனம், எரிசக்தி, பெட்ரோ கெமிக்கல்ஸ், ஜவுளி, இயற்கை வளங்கள், சில்லறை விற்பனை மற்றும் தொலைத்தொடர்பு ஆகியவற்றில் ஈடுபட்டு இந்தியா முழுவதும் வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது.

சந்தை மூலதனத்தால் இந்தியாவில் மிகப் பெரிய அளவில் வர்த்தகம் செய்யப்படும் நிறுவனம், ஜூன் 2020 அன்று, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சந்தை மூலதனமயமாக்கலில் 150 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டிய முதல் இந்திய நிறுவனமாக ஆனது, அதன் சந்தை மூலதனம் பிஎஸ்இயில், 11,43,667 கோடியைத் தாக்கியது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஏறுமுகம் கண்டு புதிய வரலாற்று சாதனை படைத்து வந்த ரிலையன்ஸ் லாப பதிவு காரணமாக 3.75%குறைந்து வீழ்ச்சி பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக நெஸ்லே 3.02% சதவீதம் சரிவை கண்டது மேலும் ஹெச்சிஎல் டெக், எம் அண்ட் எம், எச்டிஎஃப்சி பேங்க், மாருதி சுசுகி, டிசிஎஸ், ஏசியன் பெயிண்ட், டைட்டன், டெக் மஹிந்திரா ஆகியவை ஒன்று முதல்2.70 சதவீதம் வரை சரிவை கண்டது.