கழுத்து வலி குணமாக சூப்பரான மருந்து! இதை தினமும் குடித்தாலே போதும்
நம்மில் ஒரு சிலருக்கு இருக்கும் தீராத கழுத்து வலி குணமாக எளிமையான முறையில் எளிமையாக கிடைக்கக் கூடிய பொருட்கள் பயன்படுத்தி எவ்வாறு. மருந்து தயார் செய்து குடிப்பது என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
நாம் தினமும் அதிக நேரம் டிவி பார்ப்பது, செல்போன் பயன்படுத்துவது போன்ற செயல்களின் பொழுது நம்முடைய கழுத்து ஒரே திசையை நோக்கியே இருக்கும். இதன் காரணமாக கழுத்து வலி ஏற்படுவது வழக்கம்.
இந்த கழுத்து வலியை குணப்படுத்த பெரும்பாலான நபர்கள் மருந்துக் கடைக்கு செல்வார்கள். அவ்வாறு கழுத்து வலி உள்ள நபர்கள் யாரும் இனி மருந்துக் கடைக்கு செல்ல வேண்டாம். இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் மருந்தை தயார். செய்து குடித்தாலே கழுத்து வலி குணமாகும். அது என்ன மருந்து அதை தயார். செய்ய தேவையான பொருட்கள் என்னென்ன எவ்வாறு தயார். செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.
கழுத்து வலியை குணப்படுத்தும் மருந்து தயார் செய்ய தேவையான பொருட்கள்…
* மாட்டுப்பால்
* தேன்
* மஞ்சள் தூள்
செய்முறை…
இதை தயார் செய்வது மிகவும் எளிமையான வழிமுறைதான். முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் பாத்திரம் வைத்து எடுத்து வைத்துள்ள மாட்டுப்பாலை வெதுவெதுப்பாக காய்ச்சி எடுக்க வேண்டும்.
பின்னர் அதில் 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின்னர் சுவைக்காக இதில் தேன் கலந்து கொள்ளலாம். இதோ கழுத்து வலியை குணப்படுத்தும் மருந்து தயார்.
இந்த மருந்தை தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர் குடிக்க வேண்டும். இதே போல தொடர்ந்து 7 நாட்கள் அதாவது ஒரு வாரம் குடித்து வந்தால் தீராத கழுத்து வலி குணமாகும்.