சொத்தையான உங்கள் பற்களை சரி செய்ய பூண்டுடன் இந்த பொருட்களை அரைத்து அங்கு வையுங்கள்!!

Photo of author

By Divya

சொத்தையான உங்கள் பற்களை சரி செய்ய பூண்டுடன் இந்த பொருட்களை அரைத்து அங்கு வையுங்கள்!!

இன்றைய மோசமான உணவுமுறையால் சிறியவர்கள்,பெரியவர்கள் என்று அனைவருக்கும் பல் சொத்தை ஏற்படுகிறது.பற்களில் சொத்தை ஏற்பட்டாலே அவை மிகுந்த வலி,வீக்கம்,இரத்த கசிவு,பல் குடைச்சல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.

இந்த சொத்தை பல் வலியை அதை அனுபவித்தவர்களால் மட்டுமே உணர முடியும்.பற்களில் சொத்தை ஏற்பட்டு விட்டால் அதை ஆரம்ப நிலையில் குணப்படுத்திக் கொள்ள வேண்டும்.இல்லையென்றால் அவை தீவிர பக்க விளைவுகளை கொடுத்து விடும்.குறிப்பாக சொத்தை பற்கள் இருந்தால் அவை வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.

தேவையான பொருட்கள்:-

1)பூண்டு
2)புளி
3)மஞ்சள்
4)கல் உப்பு

செய்முறை:-

முதலில் 2 பல் பூண்டை தோல் நீக்கி வைத்துக் கொள்ளவும்.பிறகு ஒரு துண்டு புளியை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு உரலில் உரித்த பூண்டு மற்றும் புளியை போட்டு இடிக்கவும்.பிறகு அதில் சிறிது மஞ்சள் தூள் மற்றும் கல் உப்பு சேர்த்து இடித்துக் கொள்ளவும்.

இதை ஒரு உருண்டையாக பிடித்து சொத்தை பல் மீது வைத்து வாயை மூடிக் கொள்ளவும்.10 முதல் 10 நிமிடங்களுக்கு இவ்வாறு செய்ய வேண்டும்.இடையிடையே உமிழ்நீர் வரும்.அதை துப்பிவிட்டு மீண்டும் அந்த பூண்டு கலவையை சொத்தை பல்லில் வைத்து அடைக்கவும்.

இவ்வாறு தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன் செய்து வந்தால் சொத்தை பல் புழுக்கள் வெளியேறி வலி,வீக்கத்தில் இருந்து நிரந்தர தீர்வு கிடைக்கும்.