குரூப் 2 தேர்வு முடிவுகள்: தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய தகவல்!

0
194
Group 2 Exam Results! Important information released by the selection board!
Group 2 Exam Results! Important information released by the selection board!

குரூப் 2 தேர்வு முடிவுகள்: தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய தகவல்!

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் கடந்த மே மாதம் குரூப் 2 தேர்வும் ,ஜூலை மாதம் குரூப் 4 தேர்வும் நடத்தப்பட்டது.மேலும் இந்த தேர்வகளில் ஏராளமானோர் பங்கேற்று தேர்வு எழுதினார்கள்.அந்த தேர்வுகளுக்கான முடிவுகள் கடந்த மாதம் வெளியாகும் என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் மகளிருக்கான இட ஒதுக்கீடு குறித்த தீர்ப்பை அண்மையில் தான் வழங்கியது.அந்த தீர்ப்பில் மகளிருக்கான 30சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் முறையை மாற்ற வேண்டும் என தீர்ப்பளித்தனர்.அதனால் முன்னதாக  மகளிருக்கான இட ஒதுக்கீட்டு  நடைமுறையில் இருந்த செங்குத்து நகர்வுக்கு பதில் கிடைமட்ட நகர்வு முறை பின்பற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

புதிய நடைமுறையின்படி தேர்வு முடிவுகளை வெளியிட காலதாமதம் ஏற்பட்டது என தகவல் தெரிவிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து குரூப் 2,குரூப் 4 தேர்வு முடிவுகள் இந்த மாத இறுதியில் வெளியிடப்படும் என கூறப்பட்டிருந்தது.இந்நிலையில் குரூப் 2 தேர்வு முடிவுகளை வெளியிடும் பணிகள் நடைபெற்று வருகின்றது .பெண்கள் இட ஒதுக்கீடு தொடர்பாக நீதிமன்றம் பிறபித்த உத்தரவை அமல்படுத்தும் பணிகள் முடிவடைந்ததும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளர் அறிவித்துள்ளார்.

author avatar
Parthipan K