கின்னஸ் சாதனை படைத்த 99 வயது பாட்டி

Photo of author

By Parthipan K

அமெரிக்காவில் விமானம் ஓட்டுவது தொடர்பான பாடத்தை பல்லாண்டு காலமாக கற்பித்து வந்த ரோபினா ஆஸ்தி என்ற 99 வயது பாட்டி கலிபோர்னியா மாகாணத்தில்  விமான ஓட்டிகளுக்கான பயிற்றுவிப்பாளராக தனது கடைசி பாடத்தை இப்போது நடத்தி முடித்து உள்ளார். அவர் விமானத்தை அனைவர் முன்னாடியும் இயக்கியும் காட்டினார். இதன் காரணமாக உலகிலேயே அதிக வயதான விமான பயிற்சியாளராகவும், விமானியாகவும் தன்னை அடையாளப்படுத்தி கின்னஸ் சாதனையை   நிகழ்த்தியுள்ளார்.

இந்த நிகழ்விற்கு முன்பு 98 வயதான ஆண்தான் அவர் அயோவா மாகாணத்தை சேர்ந்தவர் ஆவார். இப்போது அந்த சாதனையை ரோபினா ஆஸ்தி முறியடித்துள்ளார். ரோபினா ஆஸ்தியின் மாணவர் பிராண்டன் மார்டினி பேசுகையில், “1000 மணி நேரத்தில் நான் கற்றுக்கொள்ள முடியாத விஷயங்களை ரோபினா ஆஸ்தி எனக்கு கற்று தந்துள்ளார்” என குறிப்பிட்டார்.