ஓடும் பேருந்தில் வைத்து பெண்ணுக்கு நடந்த அநீதி!

Photo of author

By CineDesk

ஓடும் பேருந்தில் வைத்து பெண்ணுக்கு நடந்த அநீதி!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சான்றோர் குப்பம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஜெகன். இவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. அந்த நட்பு காதலாக மாறி இவர் ஒருதலைப்பட்சமாக அந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்தச் சூழ்நிலையில் இவர் காதலித்து வந்த அந்த பெண்ணிற்கு அவரது வீட்டில் வரன் பார்த்து நிச்சயம் செய்துள்ளனர். அதற்குப் பிறகு தன் காதலியிடம் தன் காதலை தெரிவித்துள்ளார். ஆனால் தனக்கு நிச்சயம் ஆகிவிட்டதாகவும் ஆகையால் ஜெகனை காதலிக்க மறுப்பு தெரிவித்துள்ளார் அந்த மாணவி.

இந்நிலையில் நேற்று காலை அப்பெண்ணை பின் தொடர்ந்து சென்றுள்ளார் ஜெகன்.  மேலும் அப்பெண் ஏறிய பேருந்தில் ஜெகன் அமர்ந்துள்ளார்.  பேருந்து சென்று கொண்டிருக்கும் சமயத்தில் அந்தப் பெண் எதிர்பாராத நேரத்தில் ஜெகன் தான் வைத்திருந்த தாலியை எடுத்து பெண்ணின் கழுத்தில் கட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண் கூச்சலிட்டு சக பயணிகளிடம் உதவியை நாடியுள்ளார். உடனே பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த பயணிகள் ஜெகனை பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர்.

பின்னர் வாணியம்பாடி காவல் நிலையத்தில் ஜெகனை பொதுமக்கள் ஒப்படைத்தனர். சம்பவத்தை விசாரித்த போலீசார் அப்பெண் கொடுத்த புகாரின் பேரில் இளைஞரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஓடும் பேருந்தில் இளைஞர் ஒரு பெண்ணிற்கு தாலி கட்ட கட்ட முயற்சித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.