13 தெற்காசிய போட்டி பதக்க வேட்டையில் இந்தியா!

0
93

13-வது தெற்காசிய விளையாட்டு போட்டி நேபாளத்தின் காத்மண்டு மற்றும் போக்ஹரா ஆகிய நகரங்களில் கடந்த 1-ந்தேதி தொடங்கியது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், வங்காளதேசம், பூடான், மாலத்தீவு ஆகிய 7 நாடுகளைச் சேர்ந்த 2,715 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் 487 பேர் கொண்ட குழுவினர் அங்கு அனுப்பப்பட்டனர்.
பதக்கவேட்டையில் எதிர்பார்க்கப்பட்டது போலவே இந்தியாவே ஆதிக்கம் செலுத்தியது. நாள்தோறும் இந்தியர்கள் பதக்க அறுவடை நடத்தினர்.

10 நாட்கள் நடந்த இந்த விளையாட்டு திருவிழா நேற்று கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது. நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக நேபாள துணை பிரதமர் ஈஸ்வர் பொக்ரால் கலந்து கொண்டார்.


பதக்கப்பட்டியலில் இந்தியா 174 தங்கம், 93 வெள்ளி, 45 வெண்கலம் என்று மொத்தம் 312 பதக்கங்கள் குவித்து புதிய சாதனை படைத்துள்ளது. தெற்காசிய விளையாட்டு ஒன்றில் இந்தியாவின் அதிகபட்ச பதக்கங்கள் இது தான். இதற்கு முன்பு 2016-ம் ஆண்டு சொந்த மண்ணில் நடந்த போட்டியில் 309 பதக்கங்கள் வென்றதே இந்தியாவின் சிறந்த செயல்பாடாக இருந்தது. இந்த விளையாட்டு தொடங்கிய 1984-ம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு முறையும் பதக்கப்பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்து வருவது நினைவு கூரத்தக்கது.

நடப்பு தொடரில் நேபாளம் 51 தங்கம், 60 வெள்ளி, 95 வெண்கலம் என்று 206 பதக்கத்துடன் 2-வது இடத்தையும், இலங்கை 40 தங்கம், 83 வெள்ளி, 128 வெண்கலம் என்று 251 பதக்கத்துடன் 3-வது இடத்தையும், பாகிஸ்தான் 131 பதக்கத்துடன் (31 தங்கம், 41 வெள்ளி, 59 வெண்கலம்) 4-வது இடத்தையும் பிடித்தன.

author avatar
CineDesk