கமல்ஹாசனை இயக்கும் இயக்குனர்கள் பட்டியலில் இணைந்த ஹெச் வினோத்… சமீபத்தில் நடந்த சந்திப்பு!

Photo of author

By Vinoth

கமல்ஹாசனை இயக்கும் இயக்குனர்கள் பட்டியலில் இணைந்த ஹெச் வினோத்… சமீபத்தில் நடந்த சந்திப்பு!

Vinoth

கமல்ஹாசனை இயக்கும் இயக்குனர்கள் பட்டியலில் இணைந்த ஹெச் வினோத்… சமீபத்தில் நடந்த சந்திப்பு!

நடிகர் கமல்ஹாசன் அடுத்தடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி இளம் இயக்குனர்களோடு பணியாற்ற உள்ளார்.

அரசியலுக்கு சென்ற பின்னர் கமல்ஹாசன் 4 ஆண்டுகளாக சினிமாவில் கவனம் செலுத்தவில்லை. அதன் பின்னர் அவர் நடித்த விக்ரம் திரைப்படம் தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் ஆனது. அதையடுத்து தொடர்ந்து படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார்.

அந்த வகையில் அடுத்து மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். அதையடுத்து வரிசையாக லோகேஷ், இயக்குனர்கள் வெற்றிமாறன் மற்றும் பா ரஞ்சித் ஆகியோர் கமல்ஹாசனுக்கு கதை சொல்லி வரிசையில் உள்ளனர்.

அந்த லிஸ்ட்டில் இப்போது இயக்குனர் ஹெச் வினோத்தும் இணைந்துள்ளார். சமீபத்தில் அவர் கமல்ஹாசனை சந்தித்து கதை சொல்லி சம்மதம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமில்லாமல் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பாக வெற்றிமாறன் மற்றும் ரஞ்சித் ஆகியோருக்கு அட்வான்ஸ் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு H வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் துணிவு திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்துக்குப் பிறகு வினோத் விஜய் சேதுபதியை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அதன் பின்னர் கமல்- வினோத் இணையும் படம் தொடங்கப்படலாம் என சொல்லப்படுகிறது. வரிசையாக இளம் இயக்குனர்கள் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு படங்கள் இயக்க ஒப்பந்தம் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.