கொத்து கொத்தாக உதிரும் தலைமுடி! தடுப்பதற்கு இதோ சில வழிமுறைகள்!!

0
156
#image_title

கொத்து கொத்தாக உதிரும் தலைமுடி! தடுப்பதற்கு இதோ சில வழிமுறைகள்!!

நம்மில் பலருக்கும் இருக்கும் முக்கியமான பிரச்சனை முடி உதிர்தல் பிரச்சனை ஆகும். இந்த முடி உதிர்தல் பிரச்சனையை தடுக்க நாம் பலவிதமான எண்ணெய்கள், மாத்திரைகள், சிகிச்சைகள் எடுத்திருப்போம். ஆனால் பலன் என்பது முன்பு சிறிதளவு இருந்து பின்னர் மீண்டும் முடி உதிர்தல் என்பது அதிகரிக்கத் தொடங்கும். எனவே இந்த முடி உதிர்தல் பிரச்சனையை தடுப்பதற்கு இயற்கையான முறையிலான சில மருத்துவ முறைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

முடி உதிர்தலை தடுக்கும் வழிமுறைகள்…

* முதலில் கசகசாவை எடுத்து பாலில் ஊற வைக்க வேண்டும். பின்னர் இதை அரைத்து பாசிப்பருப்பு மாவை கலந்து முடியில் தேய்த்து வந்தால் முடி உதிர்தல் பிரச்சனை இருக்காது.

* முடி சாந்த பிரச்சனைகள் அனைத்துக்கும் வெங்காயம் என்பது தீர்வு தரும் மருந்து பொருளாகும். எனவே சிறிய வெங்காயத்தின் சாறு எடுத்து தலையில் தேய்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஊறவைத்து குளித்தால் முடி உதிராது.

* கற்றாழை ஜெல்லுடன் தேங்காய் எண்ணெயை சேர்த்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்தல் பிரச்சனை இருக்காது. முடி அடர்த்தியாகும். மேலும் முடி நன்கு வளர்ச்சி அடையும்.

* செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெயை கலந்து தலைக்கு தேய்த்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் தலை கருமையாகும். மேலும் முடி உதிர்தல் பிரச்சனை இருக்காது.

* முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறிய பிறகு சீகைக்காய் தேய்த்து குளிக்க வேண்டும். இதை மூன்று மாதம் தொடர்ந்து செய்து வந்தால் முடி உதிர்தல் என்பது முற்றிலுமாக நின்று விடும்.

Previous articleநுரையீரலில் அடைபட்டு கிடக்கும் நாள்பட்ட சளி கரைந்து மலம் வழியாக வெளியேற இதை 1 கிளாஸ் பருகுங்கள்!!
Next articleபளிச்சென்று முகம் மாற வேண்டுமா! கற்றாழையை இப்படி பயன்படுத்துங்கள்!!