குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுக்கான ஹால் டிக்கெட்! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு!

0
310
Hall Ticket for Group 2 and Group 2A Exam! Notification issued by TNPSC!
Hall Ticket for Group 2 and Group 2A Exam! Notification issued by TNPSC!

குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுக்கான ஹால் டிக்கெட்! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பதவிகளுக்கான தேர்வுகளை நடத்தி வருகின்றது. கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 23 ஆம் தேதி வரை குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மே மாதம் 21 ஆம் தேதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கபட்டிருந்தது. ஆனால் தேர்வு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது எனவும்,வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

தமிழக அரசின் கீழ் செயல்படும் துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பும் வகையில் தமிழக அரசு சார்பில் இந்த டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடத்தப்படுகின்றது. மேலும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ முதன்மைத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை வெளியிட்டுள்ளது.

குரூப் 2, 2 ஏ தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் தேர்வாணையத்தின் www.tnpsc.gov.in  மற்றும் www.tnpscexams என்ற இணையதளத்தின் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் மூலமாக விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleமதுரை கோட்டம் வெளியிட்ட அறிவிப்பு! இங்கு ரயில் சேவையில் மாற்றம்!
Next articleஇந்த மாவட்டத்தில் இன்று  பள்ளிகளுக்கு  திடீர் விடுமுறை! ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு!