இந்த மாவட்டத்தில் இன்று  பள்ளிகளுக்கு  திடீர் விடுமுறை! ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு!

இந்த மாவட்டத்தில் இன்று  பள்ளிகளுக்கு  திடீர் விடுமுறை! ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு!

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள பிலிப்பட்டியிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. அந்த பள்ளியில் இருந்து நேற்று விளையாட்டுப் போட்டிகளுக்கு தொட்டியம் சென்று திரும்பிய மாணவிகளில் நான்கு பேர் காவிரியாற்றில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது அந்த மாணவிகளுக்கு நீச்சல் தெரியாத காரணத்தினால் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

மேலும் நேற்று நள்ளிரவு கரூரில் இருந்து கொண்டு வரப்பட்ட  மாணவிகளின் உடல்கள் இரவே அடக்கம் செய்யப்பட்டது. அமைச்சர் எஸ். ரகுபதி, கரூர் எம்பி ஜோதிமணி, ஆட்சியர் கவிதாராமு உள்ளிட்டோர் மாணவிகளின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

அவர்களுக்கு மாநில அரசின் நிவாரண உதவியாக தலா 2 லட்சம் வழங்கினர். அந்த மாணவிகளின் இறப்பு காரணமாக இன்று பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்த மாணவிகளின் இழப்பு அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சேலம் மாவட்ட பிரிவு சார்பில் 2022-23 ஆம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.