ஒரு சிலருக்கு இரவு படுத்து தூங்கும் பொழுது நடுராத்திரியில் நரம்புகள் இழுப்பது போல கால்களில் வலி இருக்கும். அது மிகவும் அதிகமான வலியை தரும். அந்த நரம்பானது நம் உடலிலேயே நீளமான நரம்பு ஆகும். இந்த நரம்புகள் பின்னப்படுவதால் தான் அந்த வலி ஏற்படுகிறது. இந்த நரம்பின் பெயர் சியாட்டிக்கா.
இதனை எப்படி இயற்கை முறையில் சரி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
1. பால் ஒரு டம்ளர்
2. கசகசா 2 ஸ்பூன்
3. ஏலக்காய்-2
4. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
5. நாட்டுச் சர்க்கரை அல்லது தேன்.
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் ஒரு டம்ளர் பாலை ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு சூடாக்கவும்.
2. பின் அதில் இரண்டு ஸ்பூன் கசகசாவை போடவும்.
3. பின் இரண்டு ஏலக்காயை தட்டி போடவும்.
4. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை போடவும்.
5. பால் நன்றாக சுண்டும் வரை காய்ச்சவும்.
பின் அந்த பாலை வடிகட்டி ஒரு டம்ளரில் சேர்த்துக் கொள்ளவும். பால் மிதமான சூட்டில் இருக்கும் அல்லது நாட்டுச் சர்க்கரை அல்லது தேன் கலந்து குடிக்கலாம்.
அருந்தும் நேரம்:
இது இரவு படுக்கச் செல்லும் முன் சாப்பிட்ட பிறகு அரை மணி நேரம் கழித்து குடித்து விட்டு 10 நிமிடம் கழித்து தூங்கச் செல்லலாம்.
இதனை ஏழு நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வர கை கால் மறுத்துப்போதல் மூட்டு வீக்கம் ஆகியவை சரியாகிவிடும்.