1 முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஏற்படும் சகல நோய்களையும் ஓட விரட்டும் கை கண்ட மருந்து!!
தற்போதைய காலகட்டத்தில் நோயின்றி குழந்தைகளை வளர்ப்பது ஒரு சவாலான விஷயமாக இருந்து வருகிறது.பெற்றோர்களின் கவனக் குறைவு மற்றும் மோசமான உணவு பழக்கத்தால் குழந்தைகளுக்கு எளிதில் நோய் தொற்றி விடுகிறது.
நமது பாட்டிமார்கள் ஏகப்பட்ட வீட்டு வைத்தியம் செய்து நம்மை வளர்த்தார்கள்.இதனால் உடலில் நோயின்றி வாழ்ந்தோம்.ஆனால் தற்பொழுது வீட்டு வைத்தியம் மெல்ல மெல்ல அழிந்து வருகிறது.
இந்நிலையில் குழந்தைகளுக்கு ஏற்படும் பசியின்மை,வயிற்றுப்போக்கு,வயிறு வீக்கம்,இருமல்,வயிற்று வலி,பேச்சு திறன்,பார்வை திறன் உள்ளிட்ட பாதிப்புகளை வீட்டு வைத்தியம் மூலம் எளிதில் குணப்படுத்தி விடலாம்.
1)பசியின்மை நீங்க:
*வசம்பு
*தாய்ப்பால்
நன்கு காய்ந்த வசம்பை சூடுபடுத்தி தாய்ப்பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் பசியின்மை பிரச்சனை சரியாகும்.
2)வயிற்றுப்போக்கு,நெஞ்செரிச்சல்,வயிறு வீக்கம் குணமாக:
*வசம்பு பொடி
*தேன் அல்லது தேன்
சிறிது வசம்பு பொடி எடுத்து அதில் சுத்தமான தேன் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுத்தால் வயிற்றுபோக்கு,நெஞ்செரிச்சல்,வயிறு வீக்கம் குணமாகும்.ஒரு வயதிற்குள் இருக்கும் குழந்தைகளுக்கு தாய்ப்பாலில் கலந்து கொடுக்கலாம்.
3)இருமல்,வயிற்று வலி குணமாக:
*வசம்பு
*அதிமதுரம்
இவை இரண்டையும் அரைத்து கஷாயம் போல் செய்து குழந்தைகளுக்கு கொடுத்தால் இருமல்,வயிற்று வலி சரியாகும்.
4)வாயுத் தொல்லை
*வசம்பு
*தேங்காய் எண்ணெய்
ஒரு துண்டு வசம்பை எரிய விட்டு அதன் சாம்பலை எடுத்து தேங்காய் எண்ணையில் குழைத்து குழந்தைகளுக்கு அடி வயிற்றுப்பகுதியில் தடவினால் வாயுத் தொல்லை நீங்கும்.
5)வலிப்பு நோய் வராமல் இருக்க:
வசம்பு தண்டை தாயத்து போல் செய்து குழந்தைகளின் இடுப்பில் கட்டினால் வலிப்பு நோய் வராமல் இருக்கும்.