வெயில் காலத்தில் ஏற்படும் கண் எரிச்சல் மற்றும் கண் வறட்சியை சரி செய்ய உதவும் கை வைத்தியம்!!
வெயில் காலத்தில் உடலில் அதிகளவு பாதிக்கப்படும் உறுப்புகளில் ஒன்று கண்.அதிக உடல் சூட்டால் கண் எரிச்சல்,கண் வறட்சி,கண் வலி ஏற்படும்.கண்களில் குறைபாடு ஏற்பட்டால் அவை மிகுந்த சிரமத்தை உண்டு பண்ணி விடும்.
காலையில் எந்த உடன் முகம் மற்றும் கண்களை சுத்தமான நீரில் கழுவ வேண்டும்.முகத்திற்கு சோப் பயன்படுத்தாமல் வாஸ் செய்யுங்கள்.அதன் பின்னர் தங்களால் முடிந்த அளவிற்கு தண்ணீர் அருந்துங்கள்.
இவ்வாறு செய்வதால் உடல் சூடு தணியும்.இதனால் கண் எரிச்சல் நீங்கும்.அதன் பின்னர் பழைய சாதம் இருந்தால் அதை குடித்து உடலை குளிர்ச்சியாக்கி கொள்ளலாம்.இரவு தூங்கச் செல்வதற்கு முன் சில சொட்டு விளக்கெண்ணெயை கண்களை சுற்றி அப்ளை செய்யவும்.இவ்வாறு செய்வதினால் கண் எரிச்சல்,வறட்சி நீங்கி கண் பார்வை தெளிவாகும்.
கேரட்,வெள்ளரி போன்றவற்றை வட்டமாக நறுக்கி கண்களை மீது வைத்து சிறிது நேரம் கண்களுக்கு ஓய்வு கொடுக்கவும்.இதனால் கண் எரிச்சல்,வறட்சி நீங்கும்.
கண் இமைகளில் தேங்காய் எண்ணெய் அப்ளை செய்து வந்தால் கண் வறட்சி நீங்கும்.பபிரஸ் கற்றாழை ஜெல்லை ப்ரிட்ஜில் வைத்து ஐஸ்பேக் போல் தயார் செய்து கண்களுக்கு மசாஜ் கொடுக்கலாம்.இவற்றை எல்லாம் கடைபிடித்து வந்தால் கண் எரிச்சல்,கண் வறட்சி நீங்கும்.