உங்கள் முக அழகை கெடுக்கும் கருவளையத்தை மாயமாய் மறைய வைக்கும் கை வைத்தியம்!!

0
136
#image_title

உங்கள் முக அழகை கெடுக்கும் கருவளையத்தை மாயமாய் மறைய வைக்கும் கை வைத்தியம்!!

கண்களை சுற்றி உள்ள கருவளையம் எளிதில் மறைய கீழே கொடுக்கப்பட்டுள்ள கை வைத்தியத்தை ட்ரை பண்ணவும்.

1)காபி தூள்
2)தேன்

ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி காபி தூள் மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து பேஸ்ட் போல் கலக்கி கொள்ளவும். இதை கண்களை சுற்றி அப்ளை செய்து 1 மணி நேரத்திற்கு பின்னர் குளிர்ந்த நீர் கொண்டு கண்களை சுத்தம் செய்யவும். இவ்வாறு செய்யத் தொடங்கிய சில தினங்களில் கண்களை சுற்றி உள்ள கருவளையம் மறையத் தொடங்கும்.

1)உருளைக்கிழங்கு
2)சர்க்கரை

ஒரு சிறிய உருளைக்கிழங்கை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பிறகு மிக்ஸி ஜாரில் நறுக்கிய உருளைக்கிழங்கை போட்டு பேஸ்ட் போல் அரைக்கவும்.

இந்த பேஸ்டை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ளவும். இந்த சாறில் ஒரு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து கரையும் வரை கலக்கவும்.

இதை கண்களை சுற்றி அப்ளை செய்து வாஷ் செய்து வந்தால் கருவளையம் நீங்கும்.

1)உருளைக்கிழங்கு

சிறிது உருளைக்கிழங்கை தோல் நீக்கி மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து சாறு எடுக்கவும். இந்த சாற்றை ப்ரிட்ஜில் வைத்து ஐஸ் கியூப் ஆக வந்ததும் கண்களை சுற்றி மஜாஜ் செய்தால் வந்தால் கருவளையம் முழுமையாக சரியாகும்.