மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!! தமிழக அரசின் புதிய அறிவிப்பு!!
தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் தலைமையில் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது “மாநில மதிப்பீட்டுப் புலம்” எனப்படும் முன்னோடி திட்டத்தின் கீழ் தமிழக அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களில் இருக்கின்ற அனைத்து பள்ளிகளிலும் கணினி மூலமாக மாணவர்களுக்கு வினாடி வினா நடத்த வேண்டும் என்று கூறியுள்ளது.
இந்த திட்டத்தை பள்ளிக்கல்வி மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் முதலியவை சேர்ந்து நடத்த உள்ளது. எனவே தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைந்துள்ள அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வினாடி வினா நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வுகள் வருகின்ற 10.07.2023 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதற்காக அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், அனைத்து வகுப்பு ஆசிரியர்கள், உயர் தொழில்நுட்ப ஆய்வக ஒருங்கிணைப்பு ஆசிரியர்கள் ஆகியோருக்கு இணைய வழியில் பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைந்துள்ள அரசு பள்ளிகளில் மட்டுமே இந்த பயிற்சி நடத்தப்பட வேண்டும். இந்த உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தில் தொழில்நுட்பத்தில் ஏதேனும் குறைப்பாடு நிகழ்ந்தால் 14417 என்ற இலவச தொலைப்பேசிக்கு அழைத்து வினாத்தாள் தயாரிக்கும் சிக்கல்களில் தீர்வு காணலாம்.
தலைமை ஆசிரியர்களுக்கும், வகுப்பு ஆசிரியர்களுக்கும் இந்த பயிற்சி அளிக்கப்பட்ட பிறகு அவர்கள் தங்கள் பள்ளியில் உள்ள மற்ற ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க வேண்டும்.
இனி வரும் நாட்களிலும் இதுபோன்ற வினாடி வினா அல்லது வளரறி மதிப்பீடுகள் முதலியவை உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் வழியாக தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது குறித்து அனைத்து மாவட்டங்களின் முதன்மை கல்வி அலுவலர்களும் உறுதி செய்திருக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இந்த வினாடி வினா போட்டியானது, ஆறாம் வகுப்பிற்கு ஜூலை 10 ஆம் தேதியும், ஏழாம் வகுப்பிற்கு ஜூலை 11 ஆம் தேதியும், எட்டாம் வகுப்பிற்கு ஜூலை 12 ஆம் தேதியும் மற்றும் ஒன்பதாம் வகுப்பிற்கு ஜூலை 13 முதலிய தேதிகளில் நடத்தப்பட முடிவு செய்துள்ளது.
இந்த நாட்களில் பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு ஜூலை 14 ஆம் தேதி வினாடி வினா போட்டிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை 17 ஆன்றும், 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஜூலை 18, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இந்த வினாடி வினா போட்டிகள் நடத்தப்படும்.
இது மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.