மாற்றுத் திறனாளிகளுக்கு ஹாப்பி நியூஸ்!! உயர்த்தப்பட்ட புதிய உதவித்தொகையுடன் அரசாணை வெளியீடு!!
மாற்றுத் திறனாளிகளுக்கு விபத்து நிவாரண தொகையை உயர்த்தி தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டு உள்ளது.
மாற்றுத்திரனாளிகளின் நல வாரியத்தில் இருந்து விபத்து நிவாரண நிதியாக ரூ. 1 லட்சம் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது அதனை உயர்த்தி உள்ளது. இதன்படி விபத்தினால் இறக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் நிவாரணத்தொகை ரூ.2 லட்சம் உயர்த்தி வழங்கப்படும்.
மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கு உறுப்புகளில் இழப்பு அதாவது கை அல்லது கால் இழப்பு, கண்பார்வை இழப்பு ஏற்பட்டால் வழங்கப்படும் நிவாரணத்தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.அடுத்து மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகள் கல்வி பயில வழங்கப்படும் வருடாந்திர உதவித்தொகையும் உயர்த்தி புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி மாற்றுத் திறனாளிகளின் மகன் அல்லது மகள் கல்வி பயில வழங்கப்பட்டு வந்த வருடாந்திர உதவித் தொகையான ரூ.1000 ஐ தற்போது ரூ.2000 ஆக உயர்த்தி உள்ளது. அதேபோல விடுதியில் தங்கி பயிலும் மாற்றுத் திறனாளிகளின் பிள்ளைகளுக்கு நிவாரணத் தொகையை ரூ.2500 ஆகவும் உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.