மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. குறைந்தது தங்கம் விலை..!

0
173
#image_title

மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. குறைந்தது தங்கம் விலை..!

நாளை மாசி மாதம் தொடங்க உள்ளது. இந்த மாதத்தில் சுப நிகழ்ச்சிகளுக்கு பஞ்சம் இருக்காது… திருமணம், நிச்சயதார்த்தம், காதுகுத்து, பண்டிகை என்று மாதம் முழுவதும் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்… இந்த சுப நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்க நகை கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும்.

கடந்த சில தினங்காக தங்கம் விலை பெரியளவில் ஏற்றம் காணவில்லை. நேற்று விலைமாற்றம் இன்றி முந்தின நாள் விலைப்படியே தங்கம் விற்பனையானது.

இன்று 22 கேரட் மற்றும் 24 கேரட் தங்கத்தின் விலை குறைந்தும்… வெள்ளி விலை மாற்றம் இன்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் நேற்று 1 கிராம் ரூ.5,830க்கும் 1 சவரன் ரூ.46,640க்கும் விற்பனையான நிலையில் இன்று கிராமுக்கு ரூ.20 குறைந்து 1 கிராம் ரூ.5,810க்கும் 1 சவரன் ரூ.46,480க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல் 24 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.22 குறைந்து 1 கிராம் ரூ.6,338க்கும் சவரனுக்கு ரூ.176 குறைந்து 1 சவரன் ரூ.50,704க்கும் சவரனுக்கும் விற்பனையாகின்றது.

வெள்ளி விலையில் மாற்றம் இன்றி நேற்றைய விலைப்படி ஒரு கிராம் ரூ.77க்கும், ஒரு கிலோ ரூ.77,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.