வீடு முதல் காடு வரை கடன் வசதி ஆறு மாவட்ட மக்களுக்கு ஹாப்பி நியூஸ்!! கிராம வங்கிகள் அதிரடி அறிவிப்பு!!
அனைத்து மாநில அரசுகளும் கிராம மக்களுக்கு பல திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறது. மேலும் கிராமப்புற மக்களுக்கு வசதியாக இருக்க அதிரடி அறிவிப்புகளை தமிழக அரசு அடிக்கடி அறிவித்து வருகிறது. தமிழகத்தில் கிராம மக்களுக்கு உதவும் வகையில் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அதனையடுத்து தமிழகத்தில் கிராம வங்கி செயல்பட்டு வருகிறது. அந்த கிராம வங்கி மூலம் விவசாயிகளுக்கு கடன் மற்றும் தொழில் தொடங்க கடன் வழங்கி வருகிறார்கள். இந்த நிலையில் கிராம வங்கி சார்பாக வேலூர், ராணிப்பேட்டை, வேலூர் , திருவள்ளூர், திருவண்ணாமாலை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் இன்று சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
மேலும் இந்த முகாம் மூலம் கடன் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார். அதனை தொடர்ந்து சிறப்பு முகாம் மூலம் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் செய்வர்களுக்கு, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்குவது மற்றும் சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கு கிராம வாங்கி மூலம் கடன் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
மேல்கும் வீட்டு கடன் மற்றும் வாகன கடன் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் இது குறித்து முழு தகவலை கிராம வங்கி மேலாளரை சந்தித்து தெரிந்து கொள்ளலாம். மேலும் இன்று ஒரு நாள் மட்டும் இந்த சிறப்பு முகாம் ஆறு மாவட்டங்களில் நடைபெற உள்ளது.