பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ்!! வெளியூர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக மெட்ரோ வழங்கும் சேவை!!
தொடர் விடுமுறையின் காரணமாக வழங்கப்படும் மெட்ரோ ரயில் சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மெட்ரோ ரயில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இன்று ஆகஸ்ட் மாசம் மாதம் 11-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினம் வரை தொடர் விடுமுறை வரவுள்ளது. இதனால் சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு பணிபுரியும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல இருப்பதால் பேருந்துகள் மற்றும் ரயில்களில் கூட்ட நெரிசல்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
இந்த கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக சிறப்பு பஸ்கள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதேபோல் வருகின்ற தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக நெரிசல்மிகு நேரங்களில் மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை 6 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவையானது இன்று மட்டும் 11.௦8.2023 மட்டும் இரவு 10 மணி வரை பயணிகளுக்காக நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன்படி மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் நெரிசலான நேரங்களில் இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவையை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் மேற்கண்ட மெட்ரோ ரயில் நீட்டிப்பு சேவையானது இன்று ஒரு நாள் வெள்ளிக்கிழமை மட்டுமே செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.