ரயில்வே வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி!! இனி இவ்வாறு பயணம் செய்ய தேவையில்லை!!

Photo of author

By CineDesk

ரயில்வே வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி!! இனி இவ்வாறு பயணம் செய்ய தேவையில்லை!!

CineDesk

Happy news released by Railways!! No need to travel like this anymore!!

ரயில்வே வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி!! இனி இவ்வாறு பயணம் செய்ய தேவையில்லை!!

நம் நாட்டில் பல்வேறு போக்குவரத்து முறைகள் இருந்தாலும் மக்கள் அனைவரும் நீண்ட தூர பயணங்களுக்கு ரயில் பயணத்தையே தேர்ந்தெடுக்கின்றனர்.

பேருந்து போக்குவரத்துகள் நம் நாட்டில் அதிகமாக காணப்பட்டாலும், மக்கள் ரயில் பயணத்தையே சௌகரியமாக கருதுகின்றனர். விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் ரயிலில் கூட்டம் மிகுந்து காணப்படுகிறது.

அந்த வகையில் தற்போது தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு பயணிப்பவர்களின் எண்ணிக்கை தினம் தினம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இதற்கு புற நகர் ரயில் சேவை மிகவும் குறைவாக இருப்பதுதான் காரணம் என்று பயணிகள் அனைவரும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக செங்கல்பட்டில் இருந்து கடற்கரை செல்லும் ரயில்களை அதிகரிக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த கூட்ட நெரிசலைத் தவிர்க்க அதிக அளவில்  மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் வந்துள்ளதால் இதை பற்றி ஆய்வுகள் மேற்கொண்டு வருவதாகவும் கூறி உள்ளனர்.

இது தொடர்பாக அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் சென்னை மற்றும் புறநகர் மின்சார ரயில்களில் தினமும் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது என்று கூறி உள்ளனர்.

எனவே அலுவலக வேலை நடக்கும் போது மற்றும் கூட்ட நெரிசல் மிகுந்து காணப்படும் போது கூடுதலாக 16 மின்சார ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளதாகவும் சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறி உள்ளனர்.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த மாதத்தில் வெளியாகும் என்று தகவல் கிடைத்துள்ளது. இந்த அறிவிப்பு அடுத்த மாதத்திற்கான கால அட்டவணையின் மூலமாக வெளியிடப்படும் என்று அனைவராலும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.