பயணிகளுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்ட ஹாப்பி நியூஸ்! கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்!
தெற்கு ரயில்வே நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் கடந்த இரண்டு வருடங்களுக்கு பிறகு மக்கள் அனைவரும் உற்சாகத்துடன் பண்டிகைகளை கொண்டாடி வருகின்றனர்.கடந்த நவம்பர் மாதம் தான் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. அதனால் அவரவர்கள் விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு செல்வதற்கு சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது. ஆனால் அப்போது ஆம்னி பேருந்தின் விலை மூன்று மடங்காக உயர்ந்தது.
அதனால் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தையே விரும்பினார்கள்.அந்த வகையில் இந்த மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட கிறிஸ்துவர்கள் தயாராகி வருகின்றனர்.அதனால் நாளை முதல் சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.நாளை தாம்பரத்திலிருந்து இரவு 9 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரயில் வண்டி எண் 06021 டிசம்பர் 23 வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு திருநெல்வேலி சென்றையும்.
அதனை தொடர்ந்து மறுமார்க்கமாக திருநெல்வேலியில் இருந்து வெள்ளிக்கிழமை பகல் 1 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரயில் வண்டி எண் 06022 சனிக்கிழமை அதாவது டிசம்பர் 24 அன்று காலை 3.30 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.குறிப்பாக இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை,மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக இயக்கப்படுகிறது என தெரிவித்துள்ளனர்.
தாம்பரத்தில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரயில் வண்டி எண் 06041 சனிக்கிழமை காலை 7.10 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.இந்த ரயிலானது செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் வழியாக செல்லும்.
அதனையடுத்து எர்ணாகுளம் சென்னை சென்ட்ரலில் இருந்து வெள்ளிக்கிழமை பகல் 2.50 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரயில் சனிக்கிழமை காலை 3.10 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும் இந்த ரயிலானது கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் வழியாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.