தினம் ஒரு கிராம்பு போதும்! அதனால் ஏற்படும் நன்மைகள் இதோ!

0
280

தினம் ஒரு கிராம்பு போதும்! அதனால் ஏற்படும் நன்மைகள் இதோ!

தினந்தோறும் கிராம்பு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னவென்று இந்த பதிப்பின் மூலம் காணலாம்.சமையலுக்கு பயன்படுத்தப்படும் கிராம்பில் பல மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கின்றது.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கிராம்பு சாப்பிடுவதால் பல நன்மைகள் மற்றும் உடல் ஆரோக்கியம் கிடைக்கும். ஆயுர்வேத முறைப்படி கிராம்பு என்பது நம் உடலில் ரத்த ஓட்டம், செரிமானம் மற்றும் பல சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது.

கிராம்பில் கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், கால்சியம், வைட்டமின் சி போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. அதனால் கிராம்பை வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் இரைப்பை எரிச்சல் மற்றும் வயிற்றில் ஏற்படும் தொல்லை சரியாகும்.

மேலும் வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் தினமும் இரண்டு கிராம்பை வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றம் குணமடையும். கிராம்பில் உள்ள ஆன்ட்டி ஆக்சி கண்கள் மற்றும் கல்லீரலை பாதிக்கும் பாக்டீரியாவிடம் எதிர்த்து போராட உதவுகிறது.

கிராம்பு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் . உடலில் ஊடுருவும் நோய்க்கிருமிகளை எதிர்த்து போராட உதவுகிறது.மேலும் கிராம்பை அதிகம் அளவு எடுத்துக் கொண்டால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது.

 

Previous articleதூக்கமின்மை பிரச்சனையா? இரவில் இந்த உணவை எடுத்துக் கொண்டால் போதும்!
Next articleபயணிகளுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்ட ஹாப்பி நியூஸ்! கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here