பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட ஹாப்பி நியூஸ்!! இனிமேல் இந்த வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் !!

Photo of author

By Amutha

பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட ஹாப்பி நியூஸ்!! இனிமேல் இந்த வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் !!

பயணிகளுக்கு கூட்ட நெரிசலினை தவிர்க்கும் வகையில்  இரண்டு வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை இயக்கப் போவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது பற்றி தெற்கு ரயில்வே நிர்வாகம் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,

தெற்கு ரயில்வே நிர்வாகம் ஜூலை,, ஆகஸ்ட் ,மற்றும் செப்டம்பர் மாதங்களில் சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளது. இந்த சிறப்பு ரெயிலானது ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இதன்படி வாரந்திர சிறப்பு ரயிலானது நெல்லை- மேட்டுப்பாளையம்  இடையே ஞாயிற்றுக்கிழமை அன்று இயக்கப்பட உள்ளது.

அதேபோல் இந்த வாராந்திர சிறப்பு ரயிலுக்கான முன்பதிவானது இன்று ஜூன் 29ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்று தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.

மேலும் அடுத்ததாக எர்ணாகுளம்- வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. எர்ணாகுளம் வேளாங்கண்ணி இடையேயான சிறப்பு ரயில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சனிக்கிழமை அன்று இயக்கப்பட உள்ளது. இந்த செய்தியினை தெற்கு ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

இந்த இரண்டு சிறப்பு ரயில்களை மூலம் முக்கியமான நாட்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க முடியும் என தெற்கு நிர்வாகம் முடிவு செய்து இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. பயணிகள் தங்கள் செல்ல வேண்டிய ரயில்களில் முன்பதிவு செய்து ஜாலியான கூட்ட நெரிசல் இல்லாத பயணத்தை மேற்கொள்ளலாம்.