ஆல்டைம் பெஸ்ட் டி 20 அணி… ஒரே ஒரு இந்திய வீரருக்கு மட்டும் இடம் கொடுத்த ஹர்ஷா போக்லே!

Photo of author

By Vinoth

ஆல்டைம் பெஸ்ட் டி 20 அணி… ஒரே ஒரு இந்திய வீரருக்கு மட்டும் இடம் கொடுத்த ஹர்ஷா போக்லே!

பிரபல வர்ணனையாளரான ஹர்ஷா போக்லே தனது ஆல்டைம் டி 20 அணியை அறிவித்துள்ளார்.

இந்தியாவைச் சேர்ந்த ஹர்ஷா போக்லே 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிரிக்கெட் விமர்சகராகவும், வர்ணனையாளராகவும் பணியாற்றி வருகிறார். இந்திய வீரர்கள் உள்ளிட்ட பலரின் மீது விமர்சனங்களையும் வைத்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோலி மீது கூட விமர்சனம் வைத்துள்ள இவர் கிரிக்கெட் உலகின் குறிப்பிடத்தகுந்த வர்ணனையாளராக பார்க்கப்படுகிறார்.

இந்நிலையில் இப்போது டி 20 உலகக்கோப்பை தொடர் நடந்து வரும் நிலையில் இவர் தனது ஆல்டைம் சிறந்த டி 20 அணியை அறிவித்துள்ளார். அதில் ஒரே ஒரு இந்திய வீரருக்கு மட்டுமே இடம் கொடுத்துள்ளார். அந்த ஒரு வீரர் கோலி. இந்த அணியில் கிறிஸ் கெய்ல், பீட்டர்சன், ஷாகித் அப்ரிடி உள்ளிட்ட பல அதிரடி வீரர்களை தேர்வு செய்துள்ளார். இந்த அணி இப்போது கிரிக்கெட் ரசிகர்களின் கருத்துகளுக்கும் விமர்சனங்களுக்கும் ஆளாகியுள்ளது. ஆனால் இந்த அணியில் எந்த ஒரு வீரரையும் அவர் கேப்டனாக தேர்வு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஹர்ஷா போக்லே ஆல்டைம் சிறந்த டி 20 அணி

கிரீஸ் கெயில், ஜோஸ் பட்லர்,விராட் கோலி, கெவின் பீட்டர்சன், மைக்கல் ஹசி, ஷேன் வாட்சன்,ஷாஹித் அப்ரிடி, உமர் குல், ட்ரெண்ட் போல்ட், லசித் மலிங்கா, சாமுவேல் பத்ரி.