30 போட்டிய எடுத்து ஆய்வு பண்ணிருக்கோம்… பக்கா ஸ்கெட்ச்சோடு வர்றோம்… ரோஹித் ஷர்மா நம்பிக்கை!

0
225

30 போட்டிய எடுத்து ஆய்வு பண்ணிருக்கோம்… பக்கா ஸ்கெட்ச்சோடு வர்றோம்… ரோஹித் ஷர்மா நம்பிக்கை!

இந்திய அணியின் கேப்டன் தாங்கள் செய்த தவறுகளில் இருந்து நிறைய சரி செய்துள்ளோம் எனக் கூறியுள்ளார்.

2007 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த முதல் உலகக்கோப்பையில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. அதன் பிறகு இந்திய அணியால் தோனி, கோலி என இரு திறமையான கேப்டன்கள் வழிநடத்தியும் வெல்ல முடியவில்லை. அதனால் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கும் தொடரில் இந்திய அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்ற ஆசை இந்திய ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதுபற்றி பேசியுள்ள அவர் “இந்திய அணி 15 ஆண்டுகாலமாக உலகக்கோப்பையை வெல்லவில்லை. ஆனால் இம்முறை கோப்பையை வெல்ல பல்வேறு யூகங்களை வகுத்துள்ளோம். இந்திய மைதானங்களில் விளையாடுவதற்கும் இங்கு விளையாடுவதற்கும் வித்தியாசம் உள்ளது. ஆனால் நாங்கள் இரண்டு தொடர்களை வென்ற மகிழ்ச்சியோடு வந்துள்ளோம்.” எனப் பேசியிருந்தார்.

இந்நிலையில் இப்போது உலகக்கோப்பைக்கான தங்கள் திட்டம் குறித்து பேசியுள்ள அவர் “கடந்த உலகக்கோப்பை சீசன் முடிந்ததில் இருந்து 30 போட்டிகளை எடுத்து ஆராய்ந்து அதில் நாங்க செய்த தவறுகளைக் கண்டறிந்து வீரர்களை தயார் செய்துள்ளோம். இதன் மூலம் நிறைய பிரச்சனைகளை சரி செய்துள்ளோம். எனவே நல்ல நம்பிக்கையோடு வருகிறோம். இந்திய அணி நிர்வாகம் வீரர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளது.” எனக் கூறியுள்ளார். நாளை இந்திய அணி தங்கள் முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

Previous articleஆல்டைம் பெஸ்ட் டி 20 அணி… ஒரே ஒரு இந்திய வீரருக்கு மட்டும் இடம் கொடுத்த ஹர்ஷா போக்லே!
Next articleதமிழக அரசே இது நியாயமா? ஆந்திர மாநிலத்தில் தஞ்சமடைந்த தமிழக மின் வாரிய ஊழியர்கள் கொதித்தெழுந்த சீமான்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here