கடவுளை வணங்கும் போது உங்களுக்கு இவ்வாறு நடந்து இருக்கா?

Photo of author

By Divya

கடவுளை வணங்கும் போது உங்களுக்கு இவ்வாறு நடந்து இருக்கா?

கடவுளின் நாமும் பல வேண்டுதல்களை வைத்து வருகிறோம். காரணம் நம் வேண்டுதலை நிறைவேற்றுவார் கடவுள் ஒருவரே. குலதெய்வம், இஷ்டதெய்வம் என்று அனைவரிடத்திலும் நாம் வைக்கும் வேண்டுதல் நிறைவேறுமா? என்பதை சில அறிகுறிகள் வைத்து தெரிந்து கொள்ள முடியும்.

கோயில் அல்லது பூஜை அறை எந்த இடமாக இருந்தாலும் சரி நீங்கள் வேண்டுதல் வைக்கும் பொழுது உங்களையே அறியாமல் உங்கள் கண்களில் இருந்து கண்ணீர் வந்தால் நிச்சயம் உங்கள் வேண்டுதல் பலிக்கும்.

கோயிலில் நீங்கள் மனதில் வேண்டுதல் வைத்து வேண்டிக் கொண்டிருக்கும் பொழுது குழந்தைகள் அழுதால் உங்கள் வேண்டுதலை கடவுள் நிச்சயம் நிறைவேற்றுவார் என்று அர்த்தம்.

கோயில், வீட்டு பூஜை அறை எந்த இடமாக இருந்தாலும் நீங்கள் உங்கள் வேண்டுதலை கடவுளிடம் முன்வைக்கும் போது பல்லி சத்தமிட்டால் வேண்டுதல் பலிக்கும்.

அதேபோல் கடவுளிடம் வேண்டும் பொழுது மணி அடித்தால் உங்கள் வேண்டுதலை கடவுள் ஏற்றுக் கொண்டார் என்று அர்த்தம்.