நரம்புத் தளர்ச்சி இருக்கின்றதா? அது குணமாக இந்த மூன்று பொருட்கள் போதும்!
நரம்புத் தளர்ச்சி குணமாவதற்கு வெறும் மூன்று போட்டிகள் பயன்படுத்தி மருந்து எவ்வாறு தயார் செய்வது எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பொதுவாக நரம்புத் தளர்ச்சி ஏற்படுவது எதனால் என்றால் நம்முடைய நரம்புகளில் மின்னோட்டம் பாயும். அதில் தேய்வு ஏற்பட்டாலோ அல்லது தளர்ச்சி காரணமாகவோ ஏற்படும். சத்தான உணவுகளை சாப்பிடாமல் இருப்பது, வயது மூப்பு, மன நிறைவு இல்லாமை போன்றவை நரம்பு தளர்ச்சிக்கு காரணமாக அமைகின்றது. இந்த பதிவில் நரம்பு தளர்ச்சியை வெறும் மூன்று பொருட்களை வைத்து குணப்படுத்தவது எவ்வாறு என்பது குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்…
* கருவேலம் பிசின்
* கற்கண்டு
* பால்
செய்முறை…
முதலில் கருவேலம் பிசினை எடுத்து வெயிலில் காய வைக்க வேண்டும். பின்னர் அதை எடுத்து கற்கண்டு சேர்த்து இடித்து பொடியாக்கிக் கொள்ள வேண்டும். இதை ஒரு காற்று புகாத டப்பாவில் அடைத்து நன்றாக மூடி போட்டு மூடி வைத்து விடவும்.
அடுப்பை பற்ற வைத்து ஒரு பாத்திரம் வைத்துக் கொள்ள வேண்டும். அதில் பாலை ஊற்றி நன்கு காய்ச்ச வேண்டும். பால் காய்ந்ததும் இறக்கி இதில் அரை ஸ்பூன் அளவு இடித்து வைத்துள்ள இந்த பொடியை சேர்த்துக் கலந்து விட்டு குடிக்க வேண்டும்.
நரம்புத் தளர்ச்சி உள்ளவர்கள் அனைவரும் தொடர்ந்து இந்த பொடியை பாலில் கலந்து குடித்து வந்தால் நரம்பு தளர்ச்சி குணமாகி விடும்.