“தேங்காய் தோசை” கேள்விப்பட்டிருக்கீங்களா? இப்படி ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.. டேஸ்ட்ல அசந்துடுவீங்க!!

0
101
#image_title

“தேங்காய் தோசை” கேள்விப்பட்டிருக்கீங்களா? இப்படி ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.. டேஸ்ட்ல அசந்துடுவீங்க!!

நம் தென்னிந்தியர்களின் உணவு பட்டியலில் முக்கிய இடத்தை பிடித்துள்ள இந்த தோசை பல வகைகளில் செய்து உண்ணப்பட்டு வருகிறது.கார தோசை,மசால் தோசை,ஆனியன் தோசை,பூண்டு பொடி தோசை,கேரட் தோசை என்று பல வகைகள் இருக்கிறது.இதில் ஒன்று தான் தேங்காய் தோசை.இந்த தோசை உடலுக்கு ஆரோக்கியத்தையும்,வாய்க்கு ருசியையும் கொடுக்கிறது.

தேவையான பொருட்கள்:-

*தேங்காய் – 1/4 மூடி

*பச்சரிசி – 1கப்

*உளுந்து பருப்பு – 1/4 கப்

*உப்பு – தேவையான அளவு

*எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:-

தேங்காய் தோசை செய்வதற்கு முதலில் ஒரு பாத்திரம் எடுத்து அதில் 1 கப் பச்சரிசி மற்றும் 1/4 கப் உளுந்து பருப்பு சேர்த்து கொள்ளவும்.பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 2 முதல் 3 முறை நன்கு அலசிக் கொள்ளவும்.பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் வரை ஊற விடவும்.

பின்னர் அரிசி மற்றும் உளுந்து ஊறி வந்த பின்னர் அதை தண்ணீர் வடித்து ஒரு மிக்ஸி ஜாருக்கு மாற்றிக் கொள்ளவும்.அடுத்து அதில் 1/4 மூடி தேங்காய் துண்டு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.அடுத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.

பின்னர் இதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக கைகளால் நன்கு கலந்து விடவும்.பிறகு மோடி போட்டு புளிப்பதற்காக தொடர்ந்து இதை 10 மணி நேரம் ஊற விடவும்.

பின்னர் அடுப்பில் தோசைக்கல் வைத்து அவை சூடேறியதும் அதில் 1 குழிக்கரண்டி மாவு ஊற்றி தோசை வாரத்துக் கொள்ளவும்.பின்னர் தோசை மேல் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி இருபுறமும் திருப்பி போட்டு வேக விடவும்.பிறகு இதை ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும்.இந்த தேங்காய் தோசைக்கு கடலை சட்னி,காரச் சட்னி சிறந்த காமினேஷனாக இருக்கும்.

Previous article“கல் உப்பு” ஒன்று போதும்.. “மஞ்சள் பற்கள்” வெண்மையாக மாற!! ஒரே நாளில் தீர்வு காண முடியும்!!
Next article“மைதா பரோட்டோ” பிரியர்களா நீங்கள்? அப்போ இதை தெரிஞ்சிக்கோங்க!! இது உணவு அல்ல ஸ்லோ பாய்சன்!!