10 ஆம் வகுப்பு படிச்சிருக்கீங்களா? உங்களுக்காக ரூ.29000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை வெய்டிங்!!

0
30

10 ஆம் வகுப்பு படிச்சிருக்கீங்களா? உங்களுக்காக ரூ.29000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை வெய்டிங்!!

மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கோவையில் வனமரபியல் மற்றும் மரவளர்ப்பு (ICFRE – Institute of Forest Geneitcs and Tree Breeding)
நிறுவனம் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் அந்நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்பொழுது வெளியாகி உள்ளது.

நிறுவனம்: கோவை வனமரபியல் மற்றும் மரவளர்ப்பு

1.பணி: மல்டி டாஸ்க்கிங் ஸ்டாப்

ஆட்கள்:இப்பணிக்கு 3 ஆட்கள் தேவைப்படுகின்றனர்.

கல்வி தகுதி: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாத ஊதியம்: ரூ.18,000/- வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்: இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய கட்டணம் கிடையாது.

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு வயது 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வயது வரை தளர்வு அளிக்கப்படும்.30-09-2023 என்ற தேதியின் அடிப்படையில் விண்ணப்பத்தாரர்களின் வயது வரம்பானது கணக்கீடு செய்யப்படும்.

2.பணி: டெக்னிக்கல் அசிஸ்டென்ட்

ஆட்கள்:இப்பணிக்கு 3 ஆட்கள் தேவைப்படுகின்றனர்.

கல்வி தகுதி: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பிஎஸ்சி,டிப்ளமோ பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது இன்பர்மேஷன் டெக்னாலஜி படிப்பு முடித்திருக்க வேண்டும்.இல்லாவிட்டால் பிஎஸ்சி தாவரவியல் படிப்பை முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

மாத ஊதியம்: ரூ.ரூ.29,200/- வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்: இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய ரூ.1,500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.எஸ்சி,இஎஸ்எம் பிரிவினர் மற்றும் பெண்களுக்கு ரூ.750 கட்டணமாக வசூலிக்கப்படும்.

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு வயது 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.எஸ்சி பிரிவினருக்கு 5 வயது வரை தளர்வு அளிக்கப்படும்.30-09-2023 என்ற தேதியின் அடிப்படையில் விண்ணப்பத்தாரர்களின் வயது வரம்பானது கணக்கீடு செய்யப்படும்.

மேலும் (பீல்ட்/லேப்) பணிக்கு ஒருவர்,மெயின்டனன்ஸ் பணிக்கு 2 பேர் என்று மொத்தம் 6 பேர் தேர்வு செய்யப்பட உள்ளதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கடைசி தேதி: தகுதி மற்றும் ஆர்வம் இருக்கும் விண்ணப்பதாரர்கள் செப்டம்பர் 30 ஆம் தேதி நள்ளிரவு 11 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்து தேர்வு,சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் பணிக்கு தேர்வு ஆவார்கள்.